அன்னா வின்லாக்
அன்னா வின்லாக் (Anna Winlock) (பிறப்பு: செப்டம்பர் 15, 1857, கேம்பிரிட்ஜ், மசாசூசட்; இறப்பு: ஜனவரி 4, 1904) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வானியலாளர் ஜோசப் வின்லாக், இசபெல்லா இலேன் ஆகியோரின் மகளாவார். இவர் தன் தந்தையாரைப் போலவே மாந்தக் கணிப்பாளராகவும் வானியலாளராகவும் விளங்கினார். இவர் தான் ஆர்வார்டு கணிப்பாளர்களிலேயே முதல் பெண் கணிப்பாளரும் ஆவார். இவர் தன் காலத்து வடக்கு, தெற்கு முனையருகில் உள்ள அனைத்து விண்மீன்களையும் முழுமையாக அஅவணைப் படுத்தியதால், பெயர்பெற்ற பெண் மாந்தக் கணிப்பாளருமாகக் கருதப்படுகிறார். இவர் சிறுகோள்களின் கணக்கீடுகளுக்காகவும் ஆய்வுக்காகவும் நினைவுகூரப்படுகிறார். குறிப்பாக இவர் 433 ஈராசு, 475 ஒசில்லோ ஆகிய சிறுகோள்களின் கணக்கீடுகளைச் செய்தார்.
இளமை
[தொகு]இவர் கேம்பிரிட்ஜ் பள்ளிகளில் படித்தார். இளமையிலேயே கணித்த்திலும் கிரேக்க மொழியிலும் ஆர்வங் கொண்டிருந்தார். பள்ளிப் படிப்பு முடிந்த்தும் பள்லியின் முதல்வரிடம் இருந்து இவரது கிரேக்க மொழி ஆர்வத்தையும் நட்த்தையையும் பாராட்டிக் கடிதம் பெற்றுள்ளார். இவரது வானியல் ஆர்வம் இவரது தந்தையார் தந்த ஊக்கத்தால் பெற்றதாகும்மிவர் தனது 12 ஆம் அகவைய்ல் தன் தந்தையார் ஜோசப் வின்லாக்குடன் சொந்த மாநிலமாகிய கெந்துகி சூரிய ஒளிமறைப்புத் தேட்டத்துக்குச் சென்றுள்ளர். அன்னா தொடக்கநிலைப் பள்லிப் படிப்பு முடித்த சிறிது காலத்துக்குள்ளேயே இவரது தந்தையார் 1875 ஜூனில் இறந்துள்ளார். இவர் உடனே தன் தந்தையாரின் வழியைப் பின்பற்றிச் சம்பளத்துடன் முதல் பெண்மணியாக ஆர்வார்டு வான்காணகத்தில் பணியாளராகச் சேர்ந்தார்.[1]
ஆர்வார்டு கல்லூரி வான்காணகம்
[தொகு]ஜோசப் வின்லாக் இறந்ததும், மூத்த மகளாகிய அன்னா வின்லாக்குட்பட ஐந்து குழந்தைகளும் அவர்களது விதவைத் தாயாரும் தனியாயினர். எனவே அன்னா த்ன் குடும்பத்துக்கு நிதியாதரவு தரவேண்டி நேர்ந்தது. உடனே இவர் ஆர்வார்டு கல்லூரி வான்ௐஆணகத்துக்குச் சென்று கணக்கீட்டுப் பணியில் சேர விண்ணப்பம் தந்துள்ளார். சிறப்பாக,கைவர் ஏராளமான நோக்கிடுகளுக்கான கணக்கீடுகளைச் சுருக்கிக் கணக்கிடும் வல்லமையைப் பெற்றிருந்தார். பத்தாண்டுகளாக தன் தந்தையார் பயனற்ற நிலையில் முடிக்காமல் விட்டுச் சென்றவற்றை முடித்து தந்துள்ளார். வான்காணக இடைநிலை இயக்குநர் இத்தரவுகளைக் கணக்கிட உதவியாளரை அமர்த்தமுடியாமல் நிதி நெருக்கடி இருந்தமையால் முடிக்கப்படாமல் உள்லதென தாக்கீது தந்துள்ளார்.[2] இந்தநிலையில் தான் அன்னா வான்கணகத்தை அணுகி நோக்கீடுகளுக்கான கணக்கீட்டுப் பணியைச் செவ்வனே முடித்த நேர்மாகும். ஏற்கெனவே இவர் தன் தந்தையாரால் கணித வானியலில் அளித்திருந்த பயிற்சி வான்காணகத்தின் இப்பணிக்கு உதவியுள்ளது. இவருக்கு அப்போதைய உண்மைச் சம்பளத்தில் அரைமடங்கே தரப்பட்டுள்ளது. ஆர்வார்டு நிறுவ்னத்தால் கணக்கீடுகளுக்காக இவருக்கு 25 சென்டுகள் மட்டுமே தரமுடிந்துள்ளது.ளான்ன இந்நிலையை ஏற்று பதவியில் அமர்ந்தார்.[2]
இவர் சேர்ந்த ஓராண்டுக்குள் மூன்று பெண்கள் கனக்கீட்டுப் பணியில் மாந்தக் கணிப்பாளராகச் சேர்ந்துள்ளனர். இப்பெண்கள் அல்லது மாந்தக் கணிப்பாளர்கள் பிக்கரிங்கின் குழாம் என வழங்கப்பட்டுள்ளனர். குறைந்த சம்பளத்தில் தரமான வேளையை ஆற்றியதால் இவர்கள் பெயர்பெற்றனர் .[3] அன்னா இப்பணியை மகளிர் வானியலில் ஆற்றமுடிந்த அரிய பணியாக எண்ணினார். இவர் வான்காணக விண்மீன் திட்டங்களில் படிப்படியாக வளர்ந்து அறிவியலாளராகி உயர்ந்தமையும் இவரது விண்மீன் திட்டப் பங்களிப்புகளும் இதுவரை வானியலில் பயன்படுத்தப்படாத மகளிர் வல்லமையைத் திறம்பட எடுத்துக் காட்டியது.[4]
முதன்மைப் பங்களிப்புகள்
[தொகு]இவர் ஆர்வார்டு கல்லூரி வான்காணகத்தில் முப்பது ஆண்டுகள் பணிபுரிந்தபோது அந்த வான்காணகம் சந்தித்த அனைத்துத் திட்டங்களிலும் பங்களிப்புகள் செய்துள்ளார். இவரது கணிசமான பணி தொடர்ந்து கடினமாக உழைத்து வான்பெருவட்ட நோக்கீடுகளைச் சுருக்கிக் கணித்த பெரும்பணியே ஆகும். இந்த வான்காணகம் ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஜான் வின்லாக்கின் வழிகாட்டுதலில் பல அயல்நாட்டு வான்காணகங்களோடு இணைந்து எளிய அனைத்தும் அடங்கிய விண்மீன் அட்டவணையை உருவாக்க செயல்பட்டது. இத்திட்டம் வட்டாரங்களாக வான்கோள நடுவரைக்கு இணையாக அமைந்த வட்டங்களை வைத்துப் பிரித்தது. அன்னா தன்பணியை, "கேம்பிரிட்ஜ் வாட்டாரம் எனும் வட்டாரத்தில், தான் பணியில் அமர்ந்த சில நாட்களுக்குள்ளேயே தொடங்கினார். இத்திட்டத்தில் இருபது ஆண்டுகள் பணிபுரிந்து, இவரும் இவரது குழாமும் கேம்பிரிட்ஜ் வாட்டரப் பணியைச் செவ்வனே நிறவேற்றி Astronomische Gesellschaft Katalog எனும் வான்கோள அட்டவணைக்குப் பெரும் பங்களிப்புகள் செய்துள்ளனர். இந்த அட்டவணையின் பணிகள் அனைத்தும் சேர்ந்து ஓரிலக்கம் விண்மீன்களுக்கான தகவல்களைத் திரட்டியது. இவை இப்போது உலகமுழுதும் உள்ள வானியலாளர்களால் தம் ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.[5][6]
கேம்பிரிட்ஜ் வட்டாரப் பணியைத் தவிர, பல தனித்த திட்டங்களிலும் இவர் தன் பங்களிப்புகளைச் செலுத்தியுள்ளார். மேலும், இவர் வான்காணகப் விண்மீன் பட்டியல்களின் தொகுப்பை ( இவை பால்வெளிக் கொத்துகளில் உள்ள விண்மீன்களின் இருப்புகளைச் சுட்டும் பட்டியல்களின் திரட்டாகும்) 38 தொகுதிகளாக பதிப்பித்துள்ளார்.[6]
இறப்பு
[தொகு]இறப்பை நோக்கிப் பயணித்த இவரது நாட்கள் எந்தவிதச் சிறப்புமின்றிக் கழிந்தன. இவர் தன் இறப்பின் கடைசி ஆண்டில் அன்றாடம் நாள்முழுதுமே தடுமனால் தொல்லையுற்றார். இவர் கடைசியாக 1904 திசம்பர் 17 இல் ஆர்வாடு கல்லூரி வான்காணகத்துக்குச் சென்றுவந்துள்ளார். வருகைக் குறிப்பேட்டில் கடைசி கையெழுத்து 1904 புத்தாண்டன்று இடப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் கழித்து இவர் தன் 47 ஆம் அகவையில் மசாசூசட் போசுட்டனில் இறந்துள்ளார். கடைசிக் கருமம் கேம்பிரிட்ஜ் புனித ஜான் ஆலயத்தில் நடந்தது.[5][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ogilvie, Marilyn Bailey (1986). Women in science : antiquity through the nineteenth century : a biographical dictionary with annotated bibliography (Reprint. ed.). Cambridge, Mass.: MIT Press. pp. 177–178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780262650380.
- ↑ 2.0 2.1 Grier, David Alan (2005). When Computers Were Human (3. print. and 1. paperback print. ed.). Princeton, N.J.: Princeton University Press. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0691091579.
- ↑ Grier, David Alan (2005). When Computers Were Human (3. print. and 1. paperback print. ed.). Princeton, N.J.: Princeton University Press. p. 83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0691091579.
- ↑ Jones, Bessie Zaban; Boyd, Lyle Gifford (1971). The Harvard College Observatory: The First Four Directorships, 1839-1919. Foreword by Donald H. Menzel. Cambridge: Belknap Press of Harvard University Press. p. 387. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674374607.
- ↑ 5.0 5.1 Byrd, Mary E. (1904). "Anna Winlock". Popular Astronomy 12: 254–258. Bibcode: 1904PA.....12..254B. http://articles.adsabs.harvard.edu//full/1904PA.....12..254B/0000254.000.html. பார்த்த நாள்: 20 March 2014.
- ↑ 6.0 6.1 Ogilvie, Marilyn Bailey (1986). Women in Science : Antiquity Through the Nineteenth Century : A Biographical Dictionary With Annotated Bibliography (Reprint. ed.). Cambridge, Mass.: MIT Press. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780262650380.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Distinguished Woman". Register of Kentucky State Historical Society. May 1904. https://books.google.com/books?id=cOsxAQAAMAAJ&pg=RA1-PA71. பார்த்த நாள்: 22 March 2014.