அன்னபூர்ணா தத்தா

அன்னபூர்ணா தத்தா (Annapurna Dutta) 1894-1976 காலகட்டத்தில் வாழ்ந்த இந்தியாவின் ஆரம்பகால பெண் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களில் ஒருவராவார். அக்காலத்தில் புகைப்படம் எடுப்பது ஆண்களின் ஆதிக்கத் தொழிலாக இருந்தது. வீட்டு வேலைக்கு வெளியில் வேலைக்குச் செல்வது பெண்களுக்கு வழக்கத்திற்கு மாறான ஒரு பழக்கமாகவும் கருதப்பட்டது. அன்னபூர்ணா தனது சமகாலத்தவர்கள் மத்தியில் "புகைப்படக் கலைஞர் மசிமா" என்று புகழ் பெற்றார். சொந்தமாக படப்பிடிப்பு அரங்கம் எதையும் கொண்டிருக்கவில்லை என்றாலும் அன்னபூர்ணா தத்தா, தரகு அடிப்படையில் பணிபுரிந்தார். உருவப்படங்களைக் புகைப்படம் எடுக்க மக்களின் வீடுகளுக்குச் சென்றார். இவருக்கு கிடைத்த வருமானத்தில் பெரும்பாலானவை பெண்கள் பர்தாவை கடைபிடிக்கும் குடும்பங்களிலிருந்து வந்ததாகும். இவரே படங்களை உருவாக்கி அச்சிடவும் செய்தார்.[1][2]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]பிரிக்கப்படாத வங்காளத்தில் பிறந்த அன்னபூர்ணா, தனது 12 ஆவது வயதில் வழக்கறிஞரும் புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டிருந்த புகைப்படக் கலைஞரான உபேந்திரநாத் தத்தாவை மணந்தார். ஓவியம் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். பின்னர் 25 வயதில் தொழில் ரீதியாக புகைப்படக்கலையை கையிலெடுத்தார். தனக்குக் கிடைத்த தரகு மூலம் தனது குடும்பத்தை ஆதரித்தார்.
அன்னபூர்ணா தத்தாவிற்கு கிடைத்த தரகு வருமானம் பாடகர் அப்பாசு உடின், கவிஞர் இயாசிமுதீன் மற்றும் அசன் சுகரவர்தியின் குடும்பம் போன்ற உயரடுக்கு குடும்பங்களிலிருந்து வந்தன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PEEPING BEHIND THE PURDAH - Early women photographers". www.telegraphindia.com. Retrieved 2022-12-15.
- ↑ Lettmann, Birgit (2017). India and Its Visual Cultures: Community, Class and Gender in a Symbolic Landscape. Sage Publications India Private Limited. ISBN 9789353881238.
- ↑ Helland, Janice (2017-07-05). Local/Global: Women Artists in the Nineteenth Century (in ஆங்கிலம்). Routledge. ISBN 978-1-351-55984-3.