அனைத்துலகச் சிறுவர் ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனைத்துலகச் சிறுவர் ஆண்டுக்கான சின்னம்

1979 ஆம் ஆண்டை அனைத்துலகச் சிறுவர் ஆண்டு என யுனெசுக்கோ அறிவித்தது.[1] இந்த அறிவிப்பில் 1979 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதலாம் தேதி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கேர்ட் வால்ட்டெய்ம் (Kurt Waldheim) கையெழுத்திட்டார். 1959 ஆம் ஆண்டின் சிறுவர் உரிமைகளுக்கான சாற்றுரையின் தொடர்ச்சியாக அமைந்த இந்த அறிவிப்பு, உலகம் முழுவதிலும், ஊட்டச்சத்தின்மை, கல்விக்கான வாய்ப்புகள் இன்மை உட்பட்ட பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்பால் உலகின் கவனத்தைத் திருப்புவதை நோக்கமாகக் கொண்டது. இதன் அடைப்படையிலான முயற்சிகள் 1989 ஆம் ஆண்டின் சிறுவர் உரிமைகளுக்கான ஒப்பந்தம் உருவாவதற்கு வழி சமைத்தது.

குறிப்புகள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]