அனைத்துக்குமான சுருக்கமான வரலாறு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பில் பிரைசன் எழுதிய "A Short History of Nearly Everything" இன் மொழிபெயர்ப்பு அனைத்துக்குமான சுருக்கமான வரலாறு. இதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் ப்ரவாஹன். இந் நூலை தன்னிடம் வந்த நூலக தகவல்களை வைத்து பில் பிரைசன் எழுவில்லை. இந்நூலில் ஆரம்பகால ஆதி மனிதர்கள் குறித்து எழுதிய இரண்டு அத்தியாயங்களுக்காக அவர் 19000 கி.மீ. பயணம் செய்து 17 அகழ்வாராய்ச்சிப் பகுதிகளுக்கு நேரில் சென்று, பதிவு செய்கிறார். டார்வின் குறித்து எழுதிட காலோப்பாகஸ் தீவில் அவரைப் போலவே 178 நாட்கள் பயணிக்கிறார். நியூட்டனைப் பற்றி எழுத கேம்பிரிட்ஜ் சென்று விவான்ஸ் எனும் வாழும் அறிஞரை பார்க்க ஆஸ்திரேலியா போய், கடல் உயிரி ஆராய்ச்சிக்காக மத்திய பசிபிக், முதல் நில அதிர்வுக்கு ஜப்பான் எரிமலைகளை உணர சிசிலியின் எட்னா புகைமலை என பதினெட்டு நாடுகள், 176 அருங்காட்சியகங்கள், ஜாவாவில் கிடைத்த ஆதி மனித எலும்புக்கூடு கென்யா (ஆப்பிரிக்கா), கண்ட துர்கானா ஏரியின் 1.7 மில்லியன் ஆண்டு பழைய பெண் என அவற்றை ஆய்வு செய்தோர் உட்பட ஒரு 2000 வாழும் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து தான் திரட்டியதைத் தன் பார்வையில் மெருகூட்டி யதார்த்த நடையில் விவரிக்கிரார். 2003ல் வெளிவந்த ஒரே வருடத்தில் ஒரு மில்லியன் விற்று சாதனை படைத்தது இதன் ஆங்கிலப் பிரதி. இந்திய மொழிகளில் இது தமிழில்தான் முதலில் மொழியாக்கம் அடைந்துள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]