உள்ளடக்கத்துக்குச் செல்

அனுபம் திரிபாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுபம் திரிபாதி

2022 செப்டம்பரில் அனுபம் திரிபாதி
தொழில் நடிகர்

அனுபம் திரிபாதி ( Anupam Tripathi ; பிறப்பு 2 நவம்பர் 1988) தென் கொரியாவை தளமாகக் கொண்ட ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் பல்வேறு தென் கொரிய தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார். நெட்பிளிக்சின் இசுக்விட் கேம் (2021) என்ற தென் கொரிய நாடகத் தொடரில் அலி அப்துல் என்ற இவரது முதல் முக்கிய பாத்திரம் இவருக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அனுபம் திரிபாதி, நவம்பர் 2, 1988 அன்று புது தில்லியில் பிறந்தார்.[1][2] ஸ்பார்டகஸின் மேடை தயாரிப்பில் அடிமை வேடத்தில் நடித்து தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். இவர் 2006 முதல் 2010 வரை நாடக ஆசிரியர் சாகித் அன்வரின் பெக்ரூப் நாடகக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார்.[3]

திரிபாதி 2006 இல் பாடல் மற்றும் நடிப்புப் பயிற்சியைத் தொடங்கினார். புது தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேர விரும்பினார். ஆனால் 2010 இல் தென் கொரியாவிற்கு கலை மேஜர் ஆசிய உதவித்தொகையில் கொரியா தேசியக் கலைப் பல்கலைக்கழகத்தில் சேர சென்றார். கலாச்சாரம் மற்றும் மொழி வேறுபாடுகளை சரிசெய்வதில் ஆரம்ப சிரமம் இவருக்கு இருந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள் கொரிய மொழியில் சரளமாக மாறினார்.[2][3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

திரிபாதி ஆங்கிலம், இந்தி மற்றும் கொரிய மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.[3] இவரது தந்தை 2017 இல் இறந்தார்.[4] திரிபாதி, 2022 இல் கொரியா தேசிய கலைப் பல்கலைக்கழகத்தில் நடிப்பில் முதுகலைப் பட்டத்தை முடித்துள்ளார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 아누팜트리파티 [Anupam Tripathi, Actor]. Naver People Search (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் 10 October 2021.
  2. 2.0 2.1 2.2 Hicap, Jonathan (27 September 2021). "'Squid Game' player No. 199 Anupam Tripathi talks about role, pursuing career in Korea". Manila Bulletin (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 27 September 2021. பார்க்கப்பட்ட நாள் 27 September 2021.
  3. 3.0 3.1 3.2 3.3 Ramachandran, Naman (8 October 2021). "'Squid Game' Star Anupam Tripathi on Netflix's Global Phenomenon: 'This Was Just The Starting Point'". Variety (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 8 October 2021. பார்க்கப்பட்ட நாள் 16 October 2021.
  4. Rohira, Taanya (4 October 2021). "Meet Anupam Tripathi, the Indian actor who played Ali, a Pakistani man in Squid Game" (in en-IN). GQ India (Condé Nast). https://www.gqindia.com/entertainment/content/meet-anupam-tripathi-indian-actor-who-played-ali-pakistani-man-in-squid-game. 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபம்_திரிபாதி&oldid=3944204" இலிருந்து மீள்விக்கப்பட்டது