அனாஹிதா உபெராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனாஹிதா உபெராய்
பிறப்பு1967 (அகவை 56–57)[1]
மும்பை, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்அனாஹிதா தவார்
பணிநடிகர்

அனாஹிதா உபெராய் (பிறப்பு 1967) நாடகங்கலில் பிரபலமான ஒரு இந்திய நடிகை ஆவார். உபேராய் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

விஜயா மேத்தா மற்றும் ஃபரோக் மேத்தா போன்ற பெரு நடிகர்களின் குடும்பத்தில் உபெராய் பிறந்தார். உபெராய் தனது 12 வயதில் தனது தாயின் குழுவில் பணியாற்றத் தொடங்கினார். உபேராய் தனது பள்ளிப்படிப்பை மும்பையில் உள்ள கதீட்ரல் & ஜான் கானன் பள்ளியில் பயின்றார். பின்னர் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் உளவியல் மற்றும் சமூகவியல் பயின்றார். பின்னர், அவர்நியூயார்க்கில் உள்ள ஹெர்பர்ட் பெர்காஃப் ஸ்டுடியோவில் பயிற்சி பெற்றார். அவர் இந்தியா திரும்புவதற்கு முன்பு பிராட்வேயில் நடித்தார். [1] [2]

தொழில்[தொகு]

அனாஹிதா உபெராய் , ரூபர்ட்டின் பிறந்தநாள், கோயிங் சோலோ, கிளாஸ் மெனஜரி, சீஸ்கேப் வித் ஷார்க்ஸ் அண்ட் டான்சர்ஸ் மற்றும் இஃப் விஷ்ஸ் வேர் ஹார்ஸஸ் போன்ற பல ஆங்கில நாடகங்களில் பணியாற்றினார். உபெராய் குளோரியா முஜியோ மற்றும் ஜோ டவ்லிங் ஆகியோரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். ஜேசன் ராபர்ட்ஸ், ஈலை வாலாச், ராபர்ட் சீன், லியோனார்ட், ஜட் ஹிர்ஷ் மற்றும் மேரி ஸ்டீன்பர்கன் உள்ளிட்ட பல அமெரிக்க நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் பணியாற்றினார். [3] 2003 ஆம் ஆண்டு வெலிவந்த வெற்றித் திரைப்படமான ஜிஸ்ம் படத்திலும் பிரியங்கா கபூராக நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Stephen David (6 December 1999). "Future faces from the world of dance and theatre in India: Quiet Fire". India Today. பார்க்கப்பட்ட நாள் 2014-10-27.
  2. Powerhouse Performer. Verve. Meher Marfatya. 5 May 2009.
  3. Anahita Uberoi at Rage Theaters பரணிடப்பட்டது 23 அக்டோபர் 2014 at Archive.today. Rage Theaters. Retrieved 23 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனாஹிதா_உபெராய்&oldid=3668129" இலிருந்து மீள்விக்கப்பட்டது