அனாதைப் படைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனாதைப் படைப்பு (orphan work) என்பது பதிப்புரிமைக்கு உட்பட்ட ஆனால் தளர்விலா முயற்சிக்குப் பின்பும் (after due diligence) பதிப்புரிமையாளர் யார் என்று அறியப்படாத அல்லது அறியப்பட்டாலும் தொடர்பு கொள்ள முடியாத ஒரு படைப்பு ஆகும். பதிப்புரிமையாளர் இறந்து அல்லது பதிப்புரிமைக்குச் சொந்தமான அமைப்பு இல்லாமல் போய், அடுத்து காப்புரிமை யாருக்கு உரித்தானது என்று நிறுவமுடியாமல் போனால் அந்தப் படைப்பு ஒரு அனாதைப் படைப்பு ஆகும்.

பதிப்புரிமை பற்றி தெளிவற்ற நிலை, ஈழப் போராட்டம் காரணமாக நிகழ்ந்த பெரும் அழிவு போன்றவை தமிழ்ச் சூழலில் கணிசமான அளவு அனாதைப் படைப்புகள் இருக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனாதைப்_படைப்புகள்&oldid=2267467" இருந்து மீள்விக்கப்பட்டது