அனாக்டோரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனக்டோரியத்தின் நாணயம்

அனக்டோரியம் அல்லது அனக்டோரியன் (Anactorium or Anaktorion, பண்டைக் கிரேக்கம்Ἀνακτόριον ) என்பது பண்டைய அகர்னானியாவில் இருந்த ஒரு நகரமாகும். இது அம்ப்ராசியோட் வளைகுடாவின் முகத்துவாரத்தில் அமைந்திருந்தது. அயோனியன் கடலில் இருந்து அம்ப்ராசியோட் வளைகுடாவிற்குள் நுழைந்ததும், ஆக்டியத்திற்கு அடுத்தான அகார்னானியாவின் முதல் நகரமாகும். அகார்னானியாவில் இருந்து இது 40 ஸ்டேடியன் தொலைவில் இருந்தது. இது அனக்டோரியத்தின் பிரதேசத்தில் இருந்தது. இந்த நகரம் சில காலம் கிரேக்கத்தின் இந்த பகுதியின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாக இருந்தது. இது கொரிந்தியர்கள் மற்றும் கோர்சிரேயர்களால் குடியேற்றமாக உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த மக்களுக்கு இடையே நடந்த போரில், பொ.ச.மு. 432 இல் கொரிந்தியர்கள் மோசடி செய்து இந்த இடத்தைக் கைப்பற்றினர். பொ.ச.மு. 425 வரை கொரிந்தியர்களின் கைகளில் இது இருந்தது. ஏதெனியர்களின் உதவியுடன் அகர்னானியர்களால் கைபற்றப்பட்டபோது கொரிந்திய குடியேறிகள் வெளியேற்றப்பட்டனர். அகஸ்ட்டஸ் இதன் குடிமக்களை நிக்கோபோலிஸ் நகரத்திற்கு புலம் பெயரவைத்தார்.[1][2][3][4]

இந்த பண்டைய நகரின் தளமானது நவீன நியா கமரினாவுக்கு அருகில் ஏஜி பெட்ரோசில் அமைந்துள்ளது.[5][6]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனாக்டோரியம்&oldid=3423866" இலிருந்து மீள்விக்கப்பட்டது