அனந்தராம தீட்சிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் தமது தனித்தன்மை வாய்ந்த சங்கீத உபன்யாசத்திற்காகப் புகழ் பெற்றவர். உபன்யாச சக்ரவர்த்தி என்று போற்றப்பட்ட இவர் 1903இல் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சேங்காலிபுரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சுப்ரமண்ய தீட்சிதர்-சுப்புலட்சுமி அம்மையார். இவரது ஆசிரியர் கடலங்குடி நடேச சாஸ்திரிகள். ராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஸ்காந்தம், தேவிபாகவதம் போன்ற இந்து சமய புராணங்களையும் இதிகாசங்களையும் சங்கீத உபன்யாச வடிவில் வழங்கினார். இவர் குருவாயூரப்பன் பக்தர் ஆவார். மக்களிடம் நாராயணீயத்தைப் பரப்பிய பெரியோரில் குறிப்பிடத்தக்கவர். செல்வந்தர்களிடம் எளியவருக்குத் தொண்டு செய்ய வலியுறுத்தியவர். இவர் 1969 அக்டோபர் 30 இல் மறைந்தார். [1]

பெற்ற பட்டங்கள்[தொகு]

 • அமிர்தவர்சினி உபன்யாச சக்கரவர்த்தி
 • வைதீக தரம் சம்ரட்சன ப்ரவசன தாத்ர உபன்யாசகா

நூல்கள்[தொகு]

உரை எழுதிய நூல்கள்[தொகு]

 • ருத்ர சமகம்
 • ஸ்கந்த புராணத்திற்கு

தொகுத்தது[தொகு]

அரிய பல கிரந்தங்களில் இருந்தும், புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் இருந்தும் சக்தி வாய்ந்த ஸ்தோத்திரங்களைத் தொகுத்து, ’ஜயமங்கள ஸ்தோத்திரம்’ எனும் நூல் தொகுப்பை அருளினார்.

இயற்றிய ஸ்லோகங்கள்[தொகு]

 • ஸ்ரீநிஸ்துலாம்பிகை சமேத ஸ்ரீ சோளேஸ்வர தசகம்" எனும் 10 ஸ்தோத்திரங்களை இவர் பிறந்த சேங்காலிபுரத்தில் அமைந்துள்ள சிவபெருமானின் திருத்தலம் குறித்து இயற்றியுள்ளார்.[2]

இவரது உபன்யாசத்தை ரசித்தோர்[தொகு]

 • காஞ்சிப்பெரியவர்
 • சிருங்கேரி சுவாமிகள்
 • இந்தியாவின் முதல் பிரதமர் நேரு
 • டாக்டர் ராஜேந்திர பிரசாத்
 • டாக்டர் ராதாகிருஷ்ணன்
 • ராஜாஜி
 • பிரகாசம்
 • சி.சுப்ரமண்யம்
 • எழுத்தாளர் கல்கி சதாசிவம்
 • எம்.எஸ்.சுப்புலட்சுமி
 • காசா சுப்பாராவ்

மேற்கோள்கள்[தொகு]

 1. அனந்தராம தீட்சிதர்!
 2. குமுதம் ஜோதிடம்; 25.04.2008;ஏ.எம்.ஆர்.சிறப்புக் கட்டுரை; பக்கம்4,5
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தராம_தீட்சிதர்&oldid=2613104" இருந்து மீள்விக்கப்பட்டது