அந்தியூர் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்தியூர் மலை (Anthiyur Hills) என்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப்பகுதி ஆகும்.

அமைவிடம்[தொகு]

அந்தியூர் மலையானது ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரத்தில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடக எல்லையில் உள்ளது. இம்மலையில் மேற்கு மலை, கிழக்கு மலை என இரண்டு பிரிவான மலைகள் உள்ளன. மேற்கு மலையில் ஏறத்தாழ 40 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

மேற்கு மலையில்[தொகு]

தாளக்கரை, ஒண்ணகரை, செங்குளம், சின்ன செங்குளம், தம்புரெட்டி, கொங்காடை போன்ற கிராமங்கள் உள்ளன. மேற்கு மலையில் தாமரைக் கரையில்[1] இருந்து மேற்கு நோக்கி சென்றால், 20 கி.மீ. தொலைவில், மணியாச்சி மேடு என்ற பகுதியை அடையலாம். இவ்வழியே செல்லக் கூடிய பேருந்துகள் மணியாச்சி மேடு பகுதியுடன் திரும்பி விடும். அதற்கு மேல் பேருந்துகள் செல்ல சரியான பாதை இல்லை. இடையில் மணியாச்சி பள்ளம் என்ற ஒரு காட்டாறு குறுக்கிடுகிறது. இந்த காட்டாறானது சில நேரங்களில் நீரின்றிக் காணப்படும். ஆனால், மேலே உள்ள காட்டுப்பகுதியில் மழை பெய்தால், காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஆனால் தற்போது மணியாச்சி பள்ளத்தின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட்டு உள்ளது. அதனால் வாகனங்கள் வனக்கிராமங்களுக்குள் செல்ல முடிகிறது. இதனைக் கடந்து அடர்ந்த காட்டுப்பகுதி வழியே சென்றால், முதலில் தம்முரெட்டி என்ற மலைக்கிராமத்தைக் காணலாம்.[2] இங்கே ஒரு அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் கடந்த 2002-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்ததாக, ஒசூர் என்ற மலைக்கிராமம் உள்ளது.

கிழக்கு மலையில்[தொகு]

கிழக்கு மலையில் மடம், தேவர்மலை,[3] ஈரட்டி, கடை ஈரட்டி, மின் தாங்கி, பெஜலெட்டி, வெள்ளி மலை, அனைப்போடு போன்ற மலைக்கிராமங்கள் உள்ளன.

அந்தியூரில் இருந்து ஏறத்தாழ ஒரு மணி நேர பயணத்தில், வரட்டுப்பள்ளம்[4] அணையைக் கடந்து சென்றால், தாமரைக்கரை என்ற மலைக்கிராமத்தை அடையலாம். இக்கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தாமரைப்பூக்கள் அதிகமாக இருந்த காரணத்தால் இவ்வூருக்கு தாமரைக்கரை என்ற பெயர் வந்தது.

தாமரைக்கரையில் இருந்து நேரே சென்றால், பர்கூர் என்ற மலைக்கிராமத்தை அடையலாம். அடுத்ததாக பர்கூரில் இருந்து சென்றால், கர்நாடக மாநில எல்லையான பாலாறு குறுக்கிடுகிறது. பாலாறுக்கு அடுத்து கர்நாடக மாநிலம் தொடங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Reporter, Staff (2022-09-07). "20 injured as bus falls into gorge near Bargur hills in Erode". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-05-06.
  2. "பர்கூர் மலைப்பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்து". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/nov/09/van-overturns-on-baku-mountain-road-3501088.html. பார்த்த நாள்: 6 May 2023. 
  3. தினத்தந்தி (2022-08-19). "பர்கூர் மலையில் தேவர்மலை கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து கொடுமை- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-06.
  4. தினத்தந்தி (2022-07-30). "அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தியூர்_மலை&oldid=3721344" இலிருந்து மீள்விக்கப்பட்டது