அந்தகக்கவி வீரராகவ முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அந்தகக்கவி வீரராகவர் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் பூதூர் எனும் ஊரில் பிறந்தவர். பொன்விளைந்த களத்தூரில் வாழ்ந்தவர். இவர் இசையிலும் பயிற்சி உள்ளவர். கவிஞரும் ஆவார்.

இளமைப் பருவம்[தொகு]

இவர் தந்தையார் வடுகநாதர் என்பவர். வீரராகவர் பிறவியிலேயே கண்ணொளி இழந்தார். கேள்வியறிவின் வாயிலாகக் கல்வி கற்றார். இவர் இயற்றிய பாடல்கள் சொற்சுவையும் பொருள்நயமும் உடையவை. வள்ளல்கள் மீதும் சிற்றரசர்கள் மீதும் பல தனிப்பாடல்கள் பாடிப் பரிசுகள் பெற்றுள்ளார்.

பெற்ற பாராட்டுகள்[தொகு]

இவர் இலங்கை சென்று பரராசசேகர மன்னனைப் பாடி ஒரு யானை, பொற்பந்தம், ஓர் ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்று ஊர் திரும்பினார். இதனால் இவர் புகழ் கடல் கடந்தும் பரவியது.

படைப்புகள்[தொகு]

பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா ஆகியவை பாடியுள்ளார். இவர் பாடிய உலா நூல்கள் இரண்டு. ஒன்று ஓர் அரசனைப் பற்றியது. மற்றொன்று திருவாரூர்ச் சிவபெருமானைப் பற்றியது. எழுதிய நூல்கள் :

 • திருக்கழுக்குன்றப் புராணம்
 • திருக்கழுக்குன்ற மாலை
 • சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
 • திருவாரூர் உலா
 • சந்திரவாணன் கோவை
 • கயத்தாற்றரசன் உலா
 • கீழ்வேளூர் உலா
 • திருவேங்கடக் கலம்பகம்
 • திருக்கண்ணமங்கைமாலை
 • திருவேங்கடமுடையான் பஞ்சரத்தினம்
 • வரதராசர் பஞ்சரத்தினம்
 • பெருந்தேவியார் பஞ்சரத்தினம் போன்ற பல

தனிப்பாடல்கள்[தொகு]

தமிழகத்தில் வாழ்ந்த பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு, தனிப்பாடல் திரட்டு என்பது. இதில் 110 புலவர்கள் பாடிய 1113 பாடல்கள் உள்ளன. இவற்றுள் வீரராகவர் இயற்றிய 39 பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றுள்ளன.இவை தவிர, இவர் அவ்வப்போது கடிதங்கள்போல் பிறர்க்கு எழுதி அனுப்பிய கவிதைகள் பல உண்டு. அவை சீட்டுக்கவிகள் எனப்படும்.

உசாத்துணை[தொகு]

1) தமிழ் ஒன்பதாம் வகுப்பு, பாடநூல்,- பக்கம் 83-84. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை. 2) மு.வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதெமி வெளியீடு, பக்கம் 207-208.