அதே கண்கள் (ஜெயா தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதே கண்கள்
Adhe Kangal
தமிழ்அதே கண்கள்
வகை
 • தொலைக்காட்சித் தொடர்
 • திகில்
 • மர்மக் கதை
இயக்கம்பிரான்சிசு பாப்பு
நடிப்பு[மகேசுவரி
பாரதி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்01
அத்தியாயங்கள்156
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஒளிப்பதிவுமகேசு அரன்
படவி அமைப்புபல் புகைப்படக் கருவி
ஓட்டம்அத்தியாயத்திற்கு தோராயமாக 24-28 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜெயா தொலைக்காட்சி Jaya TV
ஒளிபரப்பான காலம்17 பெப்ரவரி 2014 (2014-02-17) –
26 செப்டம்பர் 2014 (2014-09-26)
Chronology
முன்னர்வைதேகி தமிழ் தொடரைத் தொடர்ந்து
வைதேகி

அதே கண்கள் (Adhe Kangal) என்பது 2014 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ஒரு திகில் தொலைக்காட்சித் தொடராகும். 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் நாள் முதல் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வரையில் இத்தொடர் ஒளிபரப்பானது. ஒட்டுமொத்தமாக மொத்தம் 156 அத்தியாயங்கள் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இரவு பத்து மணிக்கு இத்தொடர் அதே கண்கள் என்ற பெயரில் திகில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது. இத்தொடரில் தொலைக்காட்சி நடிகைகள் மகேசுவரியும்[1] பாரதியும் முக்கிய வேடங்களில் நடித்தனர். இயக்குனர் பிரான்சிசு பாப்பு இந்நாடகத் தொடரை இயக்கியிருந்தார். இந்த கதை ஓர் இளம் பெண்ணின் குடும்பத்தைச் சுற்றி நிகழ்கிறது. ஒரு பேயின் கதையுடன் சேர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் நிதி மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் இக் கதையில் சுழல்கின்றன [2].

கதை[தொகு]

நாகவலி என்ற பேயைப் பற்றிய கதைதான் அதே கண்கள் என்ற தொலைக்காட்சித் தொடரின் முழுமையான கதையாகும்.நடிகை பாரதி இக்கதையில் பேயாக நடித்திருந்தார். ஓர் இளம் சோடி திரையரங்கிலிருந்து வீட்டுக்கு திரும்புவதில் கதை தொடங்குகிறது. திரும்பும் வழியில் அவர்கள் பயணம் செய்த இருசக்கர வாகனத்தின் சக்கர இரப்பர் கட்டு வெடிக்கிறது. அந்நேரம் நள்ளிரவு நேரம் என்பதாலும் அப்பகுதி நெடுஞ்சாலையின் இடைப்பகுதி என்பதாலும் இளம் சோடி குறுக்கு வழியில் நகரத்தை அடைய முடிவு செய்கிறார்கள். போகும் பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அவர்கள் கடந்து செல்லும்போது அங்கிருந்த ஒரு முதியவர் அவ்வழியில் செல்ல வேண்டாம் என அவர்களை எச்சரிக்கிறார். அவ்விடம் நாகவலி என்ற ஒரு பேய் தங்கி வாழ்கின்ற இடம் என்று எடுத்தும் சொல்கிறார், ஆனால் இந்த சோடி அம்முதியவரின் சொற்களுக்கு செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து அவ்வழியில் அவர்கள் பயணிக்கிறார்கள்.

இதற்கிடையில் வழிப்போக்கர்களாய் அவ்வழியில் வந்த இரண்டு ஆண்கள் அச்சோடியை கவனித்து இளம் பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கின்றனர். அவள் திடீரென்று ஒரு பேயைப் போல சப்தமிட நினைத்து குரலை மாற்றி கத்தி பயமுறுத்துகிறாள்.

பலாத்காரம் செய்ய வந்தவர்கள் பயந்து அவ்விடத்தை விட்டு ஓடிவிடுகிறார்கள். கத்தியது ஒரு பேய் அல்ல அந்த பெண், தனது ஆண் நண்பனையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ளவும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆண்களை பயமுறுத்துவதற்காகவும் இந்த நடிப்பு வழியை பின்பற்றி செயல்படுகிறாள். ஆனால், அந்த ஆண்கள் நாகவலி பேய் தங்கியிருப்பதாக முதியவர் குறிப்பிட்ட அந்த இடத்தை அடைந்ததும், நாகவலியால் கொல்லப்படுகிறார்கள். இந்த கதை மேலும் தொடர்கிறது, இளம்பெண்ணின் குடும்பத்தைச் சுற்றி நிகழ்ச்சிகல் தொடர்ந்து வருகின்றன. அவர்கள் எதிர்கொள்ளும் நிதி மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளை பேயின் கதையுடன் இணைத்து கூறியபடி கதை நகர்கிறது.

நடிகர்கள்[தொகு]

 • மகேசுவரியாக உமா
 • நாகவலி என்ற பேயாக பாரதி என்ற கதாபாத்திரத்தில் சக்தி
 • பரத் கல்யாண்
 • சுவேதா
 • சரத்
 • சுவப்னா
 • தீபா செயன்

பன்னாட்டு ஒளிபரப்பு[தொகு]

2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் நாள் ஜெயா தொலைகாட்சியில் இத்தொடர் வெளியிடப்பட்டது. தொலைக்காட்சியின் அலைவரிசை உரிமையைப் பயன்படுத்தி அந்நிறுவனம் இத்தொடரை பன்னாட்டு அளவிலும் ஒளிபரப்பியது. மத்திய கிழக்கு, ஆசியா, ஐரோப்பா, ஆத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் ஜெயா தொலைக் காட்சியில் அதே கண்கள் தொடரை மக்களால் காண முடிந்தது.

 • சிங்கப்பூர் சிங்கப்பூர் செயற்கைக்கோள் அலைவரிசை மூலம் மியோ ஜெயா தொலைக்காட்சி..
 • ஆத்திரேலியா குளோபல் தமிழ் பார்வை மூலம் ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து .
 • மலேசியா ஆசுட்ரோ செயற்கை கோள் அலைவரிசை மூலம் மலேசியாவில் தினமும் காலை 11:30
 • கனடா தமிழ் மொழி அலைவரிசை மூலம் கனடாவில் ஏ.டி.என் ஜெயா தொலைக்காட்சி.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]