அதிவேக ஈனுலை
அதிவேக ஈனுலை அல்லது விரைவு ஈனல் உலை (Fast Breeder Reactor) என்பது ஒரு வகை அணுவுலை ஆகும். இதன் ஒரு முன்மாதிரியை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்(Indira Gandhi Centre for Atomic Research) தயாரித்து வருகிறது. இதனைப் பற்றிய தகவல், தனது சூலை 2012 இதழில் அம்மையம் வெளியிட்டது.
இந்த விரைவு ஈனல் உலையானது (Fast Breeder Reactor) இரண்டு எந்திரங்களை கொண்டுள்ளது. இவ்விரண்டு எந்திரங்களும் முகனைக் கலனுடன் (main vessel) தொடர்பு உள்ள எரிபொருள் துணை உறுப்புக்கூட்டைக் (fuel sub-assemblies) கையாள்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. அவை,
1. மாற்றல் கை (transfer arm)
2. சாய்ம எரிபொருள் மாற்று எந்திரம் (inclined fuel transfer machine)
மாற்றல் கை
[தொகு]மாற்றல் கையானது முகனைக் கலனுக்குள் எரிபொருள், போர்வை, கட்டுத் துணை உறுப்புக்கூடு ஆகியற்றை கையாள்வதற்கான எந்திரம் ஆகும்.
சாய்ம எரிபொருள் மாற்று எந்திரம்
[தொகு]இது முகனைக் கலனில் பயனுற்ற துணை உறுப்புக்கூட்டை வெளியேற்றி புதிய துணை உறுப்புக்கூட்டை மாற்றுவதற்கான எந்திரமாகும்.
சாய்ம எரிபொருள் மாற்று எந்திரத்தில் ஓரானிலை பகுதியில் ஓரானிலைக் கவிழ்வு பொறிகை (primary tilting mechanism), ஓரானிலைச் சரிவு (primary ramp), கேடயப் பொருத்தி (shield plug), இடை இணைப்புத் துண்டம் (inter connecting piece), துருத்திகள் (bellows), ஓரானிலைக் கதவு ஓரதர் (primary gate valve) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
நெய்யரித் தகடோடு (grid plate) ஓரானிலைக் கவிழ்வு பொறிகை (primary tilting mechanism) அறைப்பட்டிருக்கிறது. தரைப்பலகையின் மீது ஓரானிலைச் சரிவு அடுக்கால் (primary ramp liner) ஓரானிலைச் சரிவு அமைக்கப்பட்டிருக்கிறது. ஓரானிலைச் சரிவிற்கும், ஓரானிலைக் கவிழ்வு பொறிகைக்கும் (primary tilting mechanism) இடையில் அறை வெப்பநிலை முதல் பல்வேறு இயக்க நிலைகள் உள்ள வகை அனல் பெருத்தத்தை (differential thermal expansion) ஏற்கின்ற சருக்கு மூட்டினை (sliding joint) அமைக்க, ஓரானிலைச் சரிவின் (primary ramp) அடிப்பகுதியானது முதனிலைக் கவிழ்வு பொறிகையின் நெறி வடிப்பியுடன் (guide funnel) அமருகிறது.
ஈரானிலை பகுதியில் ஈரானிலை கதவு ஓரதர் (secondary gate valve), ஈரானிலை சரிவு (secondary ramp), எரிமக்கட்டடத்தின் (எரிபொருள் கட்டடம்) உள்ளுள்ள ஈரானிலை கவிழ்வு பொறிகை (secondary tilting mechanism) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. சுழல் கேடயக் காலைக் (rotatable shield leg) கொண்டு ஓரானிலை பகுதியையும், ஈரானிலைப் பகுதியையும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இந்த சுழல் கேடயக் கால் கோண வளையத்தினால் (slewing ring) நிற்கப்பட்ட சுழல் மேசையைக் கொண்டுள்ளது.
எரிபொருள் கையாடலின் போது, பயனுற்ற எரிபொருள் துணை-உறுப்புக்கூட்டை ஓரானிலை கவிழ்வு பொறிகையின் உள்ளேயுள்ள மாற்றல் தொட்டியில் (transfer pot) மாற்றல் கையினால் (transfer arm) அமர்த்தப்படும். துணை உறுப்புக்கூட்டையும் பயனுற்ற துணை உறுப்புக்கூட்டில் இருந்து வெளியாகும் வெப்பத்தை வெளியேற்றும் உப்பியத்தையும் கொண்ட மாற்றல் தொட்டி ஓரானிலை சரிவில் இருந்து சுழல் கேடயக் காலிற்கு சுமையை உயர்த்தி, பின்னங்கு 180 (180) பாகை சுழற்றப்பற்று ஈரானிலை பகுதிக்கு அனுப்பப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- Performance Testing of Primary Ramp and Primary Tilting Mechanism of Inclined Fuel Transfer Machine of Prototype Fast Breeder Reactor, Technical Article, IGC Newsletter, July 2012