அதியமான் கோட்டை காலபைரவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அதியமான் கோட்டை காலபைரவர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தர்மபுரியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அதியமான் கோட்டையில் உள்ள ஒரு காலபைரவர் கோயிலாகும்.[1]

கோயிலின் வரலாறு[தொகு]

இக்கோயிலை கட்டியது அதியமான் என கூறப்படுகிறது ஆனால் இதற்கு ஆதாரமில்லை. உண்மையில் இக்கோயிலைக் கட்டியது யார் என கல்வெட்டுகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போசள மன்னனான வீர நரசிம்மனின் தானைத்தலைவனான மாதவ தண்ட நாயக்கனின் அமைச்சனான பரமெய் சகானி என்பவராலேயே இக்கோயில் கட்டப்பட்டது என கி.பி 1235 ஆம் ஆண்டு கல்வெட்டு குறிக்கிறது. அக்காலத்தில் இக்கோயில் பரமேசுவரமுடையார் கோயில் என அழைக்கப்பட்டுவந்ததைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.[2]

கோயிலமைப்பு[தொகு]

இக்கோயில் திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம், முன்மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட தெற்கு நோக்கிய கோயிலாகும். திருவுண்ணாழியில் காலபைரவர் நான்கு கரங்களுடன் முன்னிரு கைகளில் ஒரு கையில் சூலம் ஏந்தியும் மறுகையில் சின் முத்திரையோடும் பின்னிரு கைகளில் அங்குசத்தையும் டமாரத்தையும் ஏந்தி நின்ற கோலத்தில் தன் ஊர்தியான நாயுடன் உள்ளார்.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கால பைரவர் கோவில்". கட்டுரை. Thandora (2016 சூன் 20). பார்த்த நாள் 24 அக்டோபர் 2016.
  2. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். பக். 111.