அதிதி அசோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிதி அசோக்
— குழிப்பந்தாட்டக்காரர் —
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு29 மார்ச்சு 1998 (1998-03-29) (அகவை 25)
பெங்களூர், இந்தியா
உயரம்1.73 மீ
தேசியம் இந்தியா
வசிப்பிடம்பெங்களூரு, இந்தியா
பணிவாழ்வு
தொழில்முறையாக மாறியது2016
தற்போதையச் சுற்று(கள்)மகளிர் ஐரோப்பியச் சுற்று
தொழில்முறை வெற்றிகள்2
மகளிர் பிஜிஏ முதன்மை போட்டிகளில் சிறந்த புள்ளிகள்
ANA Inspirationபங்கேற்கவில்லை
Women's PGA C'shipபங்கேற்கவில்லை
U.S. Women's Openபங்கேற்கவில்லை
Women's British OpenCUT: 2016
Evian Championshipபங்கேற்கவில்லை

அதிதி அசோக் (Aditi Ashok, மார்ச் 29, 1998) இந்திய தொழில்முறை குழிப்பந்தாட்ட விளையாட்டாளர்.

அதிதி லால்லா ஐச்சா சுற்று பள்ளியில் மிக இளைய அகவையில் தேறியவரும் முதல் இந்தியரும் ஆவார்; இதனால் மகளிர் ஐரோப்பியச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்று 2016ஆம் ஆண்டு பருவத்தில் கலந்து கொண்டார்.[1] இந்த வெற்றி பன்னாட்டு சுற்று ஒன்றில் பங்கேற்க தகுதிபூண் பள்ளி ஒன்றில் வெற்றி கண்ட மிக இளையவர் என்ற பெருமையும் ஈட்டியது.[2]

தற்போது இரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3] அதிதி அசோக் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி நான்காம் இடத்தைப் பெற்றார். மிகக்குறுகிய அளவிலான புள்ளிகள் வித்தியாசத்திலேயே இவர் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டுள்ளார். மகளிர் கோல்ப் விளையாட்டில் உலகத் தர வரிசையில் 200 ஆம் இடத்தில் இருந்த அதிதி 2021 ஒலிம்பிக் போட்டியில் நான்காம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.[4]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிதி_அசோக்&oldid=3211763" இருந்து மீள்விக்கப்பட்டது