அண்டவிய மதிப்பு
அண்டவிய மதிப்பு என்பது அனேகமாக எல்லா மனிதருக்கும் ஒரேமாதிரி மதிப்பு அல்லது பொருள் தரக்கூடிய ஒன்று. இந்தக் கருத்துரு குறிப்பிட்ட சமயம், நாடு, இனம், மொழி, பொருளாதார நிலை, பாலிய அமைவு ஆகியவற்றைக் கடந்து பொருள் தரக் கூடியவற்றைக் குறிக்கிறது. பல தரப்பட்டவை அண்டவிய மதிப்புக் கொண்டவை என்று கோரப்படுகின்றன. எ.கா மனித உரிமைகள் அண்டவிய மதிப்பு உடையவை என்று பலராலும் கருதப்படுகிறது. எனினும் இவை அண்டவிய மதிப்புப் பெற்றவை, மற்றயவை அல்லது என்று துல்லியமாகக் கூற முடியாது.[1][2][3]
அண்டவிய மதிப்பு என்பது நோக்கி பல வரையறைகள் உள்ளன. ஐசையா பேர்லின் எல்லோரும் ஒன்றை மதித்தால், அதற்கு அண்டவிய மதிப்பு உள்ளது என்று கூறலாம் என்கிறார். எல்லோரும் ஒன்றை அண்டவிய மதிப்பாக கருத காரணங்கள் உண்டு என்றால், அதை அண்டவிய மதிப்பு என்று கூறலாம் என்று அமர்த்தியா சென் கூறுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jahanbegloo 1991, p. 37
- ↑ Sen 1999, p. 12
- ↑ Bolin & Whelehan 1999