அணைக்கரை பூமாலை பகவதி கோயில்
அணைக்கரை பூமாலை பகவதி கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் குன்கிமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள ஓர் இந்துக் கோயில் ஆகும். இது குன்கிமங்கலத்தின் தெற்கில் உள்ள தேக்கும்பட்டில் அமைந்துள்ளது.[1] இக்கோயிலின் மூலவர் பகவதி ஆவார். இக்கோயிலின் சில விழாக்கள் மல்லியோட்டுப் பாலோட்டு காவுவுடன் தொடர்புடையதாகும்.
வரலாறு
[தொகு]பூமாலை பகவதி கப்பல் மூலமாக வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு அந்த இடம் பிடிக்கவே, அங்கேயே இருக்க விரும்பினார். அதனால் தன் சக்தியால் கடலுக்கு அடியில் இருந்த நிலத்தை வெளியில் தள்ளினார். அங்கேயே ஒரு கோயில் கட்டப்பட்டது. ஆகையால் அந்த இடம் அயினிகி கரா என்றழைக்கப்படுகிறது.
விழாக்கள், பூசைகள்
[தொகு]பட்டு உற்சவம், காளியாட்டம், பூரோற்சவம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. சொவ்வா விளக்கு, துலாபாரம், நலம் பாட்டு, சுட்டு விளக்கு, நெய் விளக்கு ஆகியவை இங்கு நடைபெறுகின்ற பூசைகள் ஆகும்.