அணுப் பொருளளவு எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

==அணுப் பொருளளவு எண்==

ஓர் அணுவின் அணுப் பொருளளவு எண் ( Mass number) A என்பது, அவ்வணுவிலுள்ள அணுக்கரு மூலக்கூறுகள் ( (Nuclear constituents ) அல்லது நியு+க்ளியான்களின் ( Nucleons) மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். நியு+க்ளியான்கள் என அழைக்கப்படுகின்றன. வட அமேரிக்க முறைப்படி, அணுப் பொருளளவு எண்ணினைத் தனிமத்தைக் குறிக்கும் குறியீட்டிற்குப் ( Elemental symbol) பின்னரும், அக்குறியீட்டின் மேற்புறமாகவும் அமைப்பார்கள். எடுத்துக்காட்டாக U238 எனக் குறிக்கப்படுகின்றது. அல்லது அனைத்து நாட்டு ஒப்பந்தப்படி (International agreement) தனிமத்தைக் குறிக்கும் குறியீட்டிற்கு முன்னதாகவும், மேற்புறமாகவும் 238U எனக் குறிக்கப்படுகின்றது. புரோட்டானின் பொருளளவும், நியு+ட்ரானின் பொருளளவும் கிட்டத்தட்டச் சரியாக இருப்பதாலும், எலெக்ட்ரானின் பொருளளவு, புரோட்டான் அல்லது நியூட்ரான் பொருளளவுடன், ஒப்பிடும்போது மிக மிக அற்பமானதாய் இருப்பதாலும் அணுப் பொருளளவு எண் அணுப்பொருளின் அளவைக்குறிக்கும் பயனள்ள தோராயமான எண்ணாக அமைகின்றது. உதாரணமாக H1=1.00814. அணுப்பொருளளவு அலகுகள் (amu) (அ.பொ.அ)U238=238.124 . அ.பொ.அ. எனக் குறிக்கப்படுகின்றது.

α-துகள் வெளிவரும்போது அணுப்பொருளளவு எண் நான்காகக் குறைக்கப்படுகின்றது. ஆனால் β-சிதைவின்போதோ (β-Decay) எலக்ட்ரான் பிடிபடும் போதோ ((Electron capture) அணுப் பொருளளவு எண் மாறுவதில்லை.

அணுப் பொருளளவு எண்

நூலோதி[தொகு]

McGraw-Hill Book of Science and Technology Vol 8. 4th Edn.,1977.

மேற்கோள்[தொகு]

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவியல் களஞ்சியம் தொகுதி 1 பக்கம் 696,697

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுப்_பொருளளவு_எண்&oldid=2900524" இருந்து மீள்விக்கப்பட்டது