அட்ரீனலின் நீக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்ரீனலின் நீக்கம்
Adrenalectomy
Adrenal Tumor.JPG
அட்ரீனலின் நீக்கம்

அட்ரீனலின் நீக்கம் (Adrenalectomy) என்பது அறுவைச் சிகிச்சையின் மூலமாக ஒன்று அல்லது இருபக்க அட்ரீனல் சுரப்பிகளையும் நீக்குவதாகும். பொதுவாக அட்ரினல் சுரப்பிகளில் கட்டிகள் உள்ள நோயாளிகளுக்கு இந்நீக்கல் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. குடல் அறுவைச் சிகிச்சை அல்லது வயிற்றறை உட்காண் அறுவை சிகிச்சை முறையில் அட்ரீனலின் நீக்கச் சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்[தொகு]

ஒருவேளை இரண்டு சுரப்பிகளும் ஒருவருக்கு நீக்கப்பட்டால் அன்னாருக்கு வாழ்நாள் முழுவதும் சிடீராய்டு இயக்குநீரான கார்டிசோன் மற்றும் ஐதரோகார்டிசோன் இயக்குநீரை இணைப்பாக கொடுக்க வேண்டும். நெருக்கடியான நேரங்களில் அன்னார் இருக்கும்போது சற்றுக் கூடுதலான அளவில் இவ்வியக்குநீர் இணைப்பு அளிக்கப்படல் வேண்டும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "surgerydoor.co.uk: Adrenalectomy". 2009-04-29 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2009-04-29 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்ரீனலின்_நீக்கம்&oldid=3574711" இருந்து மீள்விக்கப்பட்டது