அடினோ அதிநுண்ணுயிரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடினோ நச்சுயிரிகள்
இரு அடினோ நச்சுயிரித் துகள்களின் பரவல்சார் மின்னன் வரைபடம்
தீநுண்ம வகைப்பாடு e
பேரினம்
  • அட்டாடினோ நச்சுயிரி
  • அவியாடினோ நச்சுயிரி
  • இக்ட்டாடினோ நச்சுயிரி
  • மாசுட்டாடினோ நச்சுயிரி
  • சியாடினோ நச்சுயிரி
  • டெசுட்டாடினோ நச்சுயிரி
அடினோ நச்சுயிரி D26 வகையின் கட்டமைப்புப் படிமம், அணுவளவு பிரிதிறனில்[1]

அடினோ நச்சுயிரிகள் (Adenoviruses) அல்லது அண்ணவக நச்சுயிரிகள் எனும் ( அடினோவிரிடே உயிரியல் குடும்ப உறுப்பினர்கள்) நடுத்தர உருவளவு (90–100 மீநுண்மீட்டர்(மீநுண் மீ)), உறையற்ற ( புறக் கொழுப்பு இரட்டை அடுக்கில்லாத) நச்சுயிரிகள் ஆகும். இவை இரட்டைப்புரி டி.என்.ஏ. க்களைக் கொண்ட மரபன்தொகையின; இவை ஐக்கோசாஃஎடிரல் கட்டமைப்புள்ள உட்கருவன் கேப்சிடுகளைக் கொண்டுள்ளன.[2] அடி மூக்குச் சதை அல்லது அண்ணச் சதையில் இருந்து முதன் முதலில் 1953 இல் கண்டுபிடிக்கப்பட்தால் இதற்கு அண்ணவக(அடினோ) நச்சுயியிரி என்று பெயர் ஏற்பட்டது.[3]

இவை பல முதுகென்பி விலங்கு ஓம்பிகளில் காணப்படுகின்றன; மாந்தரில் இவை 50 வெவ்வேறுவகைத் திரிபுகளில் அகல்விரிவான பல்வகைத் தொற்றுகளை உருவாக்குகின்றன; இவை இளஞ்சிறாரில் காண்ப்படும் தடிமன் போன்ற எளிய மூச்சுயிர்ப்புத் தொற்றுகளில் இருந்து உயிரைப் போக்கும் அச்சுறுத்தல் மிக்க, இயல்பு எதிப்பாற்றலை நலிவிக்கும் பல்லுறுப்புத் தாக்க நோய்களை உருவாக்கும் தொற்றுகள் வரை அமைகின்றன.[2]

நச்சுயிரியியல்[தொகு]

வகைபாடு[தொகு]

இக்குடும்பத்தில் பின்வரும் பேரினங்கள் உள்ளன:[4]

  • அட்டாடினோ நச்சுயிரி
  • அவியாடினோ நச்சுயிரி
  • இக்ட்டாடினோ நச்சுயிரி
  • மாசுட்டாடினோ நச்சுயிரி ( இது அனைத்து மாந்தரின அண்ணவக(அடினோ) நச்சுயிரிகளையும் உள்ளடக்குகிறது)
  • சியாடினோ நச்சுயிரி
  • டெசுட்டாடினோ நச்சுயிரி

அடினோ நச்சுயிரியின் தன்மை[தொகு]

அடினோ நச்சுயிரிகள் 360 செல்சியஸ் வெப்பநிலையில் ஏழு நாட்கள் வரை உயிரோடிருக்கும். 40 செல்சியசில் எழுபது நாட்கள் வரை உயிரோடிருக்கும். ஆனால் 560 செல்சியசில் இரண்டரை மணித்துளிகளில் அழிக்கப்படுகின்றன. அடினோ நச்சுயிரியில் நான்கு வகை எதிர்பொருட்கள் உள்ளன. அவை எதிர்பொருள் Aஇ, எதிர்பொருள் Bஇ, எதிர்பொருள் Cஇ, எதிர்பொருள் Pஇ எனப்படும். அடினோ நச்சுயிரிகள் சிவப்புக் குருதி அணுக்களை ஒன்று சேர்க்கும் தன்மை உடையன.

அடினோ நச்சுயிரிகள் பரவும் முறை[தொகு]

இவை காற்றிலும், நோய்வாய்ப்பட்ட உடல் உறுப்புகளைத் தொடும்போதும் பரவுகின்றன. நோய்கள்

  1. கடும் மேல்தொண்டை அழற்சி
  2. கண்நோய்
  3. கடும் நுரையீரல் நோய்
  4. குளிர்காய்ச்சல்(நிமோனியா)
  5. விழி வெளிப்படல அழற்சி
  6. சில அடினோ நச்சுயிரிகள், ஆம்ஸ்டர் எனப்படும் விலங்குகளில் புற்றுநோயை உண்டாக்குகின்றன.

மேல்தொண்டை அழற்சி[தொகு]

இந்தவகையில் காய்ச்சல், நீரக்கோப்பு, இருமல் முதலிய நோய்க் குறிகள் ஏற்படும்.

கடும் நுரையீரல் நோய்[தொகு]

இந்த வகையில் காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டைக் கமறல் முதலியன ஏற்படும்.

குளிர்காய்ச்சல்[தொகு]

இந்தவகையில் நுரையீரல் தாக்கப்பட்டுக் காய்ச்சல், இருமல் முதலியன ஏற்படும்.

கடும் கண்நோய்[தொகு]

இது வழக்கமாக வயது வந்தவர்களிடம்தான் காணப்படுகின்றது. முதலில் ஒரு கண் தாக்க்கப்பட்டுப் பிறகு மற்றொரு கண் தாக்க்கப்படுகிறது. கண்கள் சிவந்தும் வீங்கியும் காணப்படும்.

விழி வெளிப்படல அழற்சி[தொகு]

இந்த நோய் ஒரு தொற்று நோய் போல் பரவக் கூடியது. இது பற்றவைத்தல் முதலிய வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்களிடம் ஏற்படுகின்றது. ஏனெனில் இவர்கள் தொழிலில், கண் விழி ஒளிப்படலம் எனப்படும் திரையில் சிறு காயங்கள், தூசியினாலோ, சிறு உலோகத் துண்டுகளினாலோ ஏற்பட்டு இப்புண்களின் மூலம் காற்றில் உள்ள அண்ணவக(அடினோ) நச்சுயிரிகள் கண்ணில் புகும்.

நோய்த் தடுப்பு முறைகள்[தொகு]

  1. நோயுற்றவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பயன்படுத்தாமல் இருப்பது.
  2. நோயுற்றவர்களைத் தொட நேர்ந்தால் கண் முதலிய பாகங்களையும், கைகளையும் துப்புரவாகக் கழுவிக் கொள்வது.
  3. பற்றுவைப்புத் தொழில் செய்வோர் கண் பாதுகாப்புக் கண்ணாடியைக் கட்டாயமாக அணிய வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Padilla-Sanchez V (2021-07-24), Adenovirus D26 Structural Model at Atomic Resolution, doi:10.5281/zenodo.5132873, பார்க்கப்பட்ட நாள் 2021-07-24
  2. 2.0 2.1 "9.11H: Double-Stranded DNA Viruses- Adenoviruses" (in en). Biology LibreTexts. 25 June 2017. https://bio.libretexts.org/Bookshelves/Microbiology/Book%3A_Microbiology_(Boundless)/9%3A_Viruses/9._11%3A_DNA_Viruses_in_Eukaryotes/9.11H%3A_Double-Stranded_DNA_Viruses-_Adenoviruses#:~:text=Siadenovirus%2C%20and%20Ichtadenovirus.-,Genome,larger%20than%20other%20dsDNA%20viruses.. பார்த்த நாள்: 6 January 2021. 
  3. "Isolation of a cytopathogenic agent from human adenoids undergoing spontaneous degeneration in tissue culture". Proceedings of the Society for Experimental Biology and Medicine 84 (3): 570–3. December 1953. doi:10.3181/00379727-84-20714. பப்மெட்:13134217. 
  4. "Virus Taxonomy: 2020 Release". International Committee on Taxonomy of Viruses (ICTV). March 2021. பார்க்கப்பட்ட நாள் 22 May 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடினோ_அதிநுண்ணுயிரிகள்&oldid=3704031" இலிருந்து மீள்விக்கப்பட்டது