அஞ்சுதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஞ்சுதா (Anjuta) கட்டற்ற/திறந்த மூல மென்பொருள் வகையில் அமைந்த பலதரப்பட்ட சிறப்பம்சங்களையுடைய ஒரு ஒருங்கிணைந்த உருவாக்குதல்சூழல் (Integrated Development environment -IDE) ஆகும். இது சி, சி++ போன்ற உயர்கணிணி மொழியில் நிரல் எழுதவும், குனோம் பணிச்சூழலுக்கான செயலிகளை கிளெடு(ஆங்கிலம்:glade) மூலம் உருவாக்கவும் உதவும் ஒருங்கிணைந்த உற்பத்திச்சூழல் ஆகும். இதன் மற்றசில உயர் சிறப்பம்சங்களாவன திட்ட மேலாண்மை (Project management), ஒருங்கிணைந்த கிளேடு பயனர் இடைமுகப்பு வடிவமைப்பி, பிழைதிருத்தி(Debuger), திறன்மிக்க நிரல் திருத்தி, நிரல் தேடல் மேலும் பல.

அஞ்சுதா மணிப்பூரை சேர்ந்த நபகுமார் என்ற இந்தியரால் உருவாக்கப்பட்டு இன்று பலதரப்பட்ட குனோம் மென்பொருள் உருவாக்குனர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா கட்டற்ற / திறந்த மென்பொருள் துறையில் எந்தவித பங்களிப்பையும் தரவில்லை பயனை மட்டுமே அனுபவிக்கிறது என்ற அவப்பெயரை நீக்கும் வகையில் இது போன்ற பல சிறந்த மென்பொருட்கள் தற்போது இந்தியரால் உருவாக்கப்பட்டுவருகிறது.

மற்ற சில கட்டற்ற / திறந்த ஒருங்கிணைந்த உருவாக்குதல்சூழல்கள்

  1. எக்லிப்ஸ் (eclipse)
  2. நெட்பீன்ஸ் (netbeans)

அம்சங்கள்[தொகு]

அஞ்சுதாவின் அம்சங்கள்,

  1. பிழைதிருத்தி(Debuger)
  2. திறன்மிக்க நிரல் திருத்தி
  3. நிரல் தானியங்கு நிறைவு
  4. வழிகாட்டிகள்[1]
  5. நிரல் சிறப்பித்தல்

வெளிஇணைப்புகள்[தொகு]

அஞ்சுதா ஒருங்கிணைந்த உருவாக்குதல்சூழலின் இணையமுகவரி

  1. Ganslandt, Björn, "GNOME Fifth-Toe 1.4 » LinuxCommunity", LinuxCommunity (ஜெர்மன்), 2018-04-15 அன்று பார்க்கப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சுதா&oldid=2510126" இருந்து மீள்விக்கப்பட்டது