அஜா ஏகாதசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரட்டாசி தேய்பிறை ஏகாதசியை அஜா ஏகாதசி என்கின்றனர்[1]. இந்த நாளைப் பற்றி ஏகாதசி மகாத்மியம் குறிப்பிடுகிறது. இந்த விரதமிருந்தால் இழந்த சொத்துகளும், சுகம் திரும்ப கிடைக்கும் என நம்பப்படுகிறது.

தொன்மம்[தொகு]

அரிச்சந்திர ராஜன் விசுவாமித்திரருக்கு கொடுத்த வாக்கினால் அரச பதவியையும், மனைவியையும், மக்களையும் இழந்து தவித்தான். சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் வேலையே செய்து வந்தான். அவனை சந்தித்த கௌதம முனிவர் இந்த ஏகாதசி விரதத்தினைப் பற்றி கூறி, அதை கடைபிடிக்க வலியுறுத்தினார். இந்த விரதத்தின் பலனாகவே இறுதியில் இழந்தது அனைத்தையும் அரிச்சந்திரன் பெற்றான்.

ஆதாரங்கள்[தொகு]

  1. தினமலர் பக்திமலர் 01.10.2015 பக்கம் 17
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜா_ஏகாதசி&oldid=2198209" இலிருந்து மீள்விக்கப்பட்டது