அசோக் ஜூன்ஜூன்வாலா
அசோக் ஜூன்ஜூன்வாலா | |
---|---|
பிறப்பு | 22 சூன் 1953 (அகவை 71) கொல்கத்தா |
படித்த இடங்கள் |
|
பணி | கல்வியாளர் |
அசோக் ஜூன்ஜூன்வாலா என்பவர் சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கழகப் பேராசிரியர்[1]. தொலைத் தொடர்புத் துறை ஆய்வு மற்றும் வளர்ச்சியில் அறிவும் திறமையும் கொண்டவர் எனக் கருதப்படுகிறார். கதிர் ஒளி மின்சாரத் தயாரிப்பில் இந்தியா கவனம் செலுத்தவேண்டும் என்று கூறிவருகிறார். இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆய்வு மையங்களாக விளங்க வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்துப் பேசி வருகிறார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]கான்பூர் இந்தியத் தொழில் நுட்ப நிறுவனத்தில் பிடெக் பட்டம் பெற்ற அசோக் ஜூன்ஜூன்வாலா கொல்கத்தாவில் ஒரு மார்வாரிக் குடும்பத்தில் பிறந்தார். மேயின் பல்கலைக் கழகத்தில் முதுகலை ஆய்வு செய்து பட்டம் பெற்றார். வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணி புரிந்த பின் 1981 முதல் சென்னை இந்தியத் தொழில் நுட்ப நிறுவனத்தில் பேராசிரியாராகப் பொறுப்பு ஏற்றார்.
விருதுகள்
[தொகு]டாக்டர் விக்ரம் சாராபாய் ஆய்வு விருது (1997)
பத்மசிறீ விருது (2002)
எச் கே பிரொட்டியா விருது