அசையெழுத்து முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசையெழுத்து முறை (Syllabary) என்பது, சொற்களை உருவாக்கும் அசைகளைக் குறிக்கும் எழுத்துக் குறியீடுகளின் தொகுதி ஆகும். அசையெழுத்து முறையில் உள்ள ஒரு குறியீடு அசையெழுத்து எனப்படும். இது, ஒரு மெய்யொலியும் அதைத் தொடர்ந்து வரும் உயிரொலியும் சேர்ந்த ஒரு தொகுதியையோ அல்லது ஒரு தனி உயிரொலியையோ குறிக்கும். இவை CV அல்லது V என்னும் வடிவங்களில் அமையும். CVC, CV-இன்னோசை போன்ற வடிவங்களிலும் அசையெழுத்துக்கள் அமைவது உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசையெழுத்து_முறை&oldid=2266673" இருந்து மீள்விக்கப்பட்டது