அங்கேரியன் தடுப்பாட்டம்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.e4 e5 2.Nf3 Nc6 3.Bc4 Be7 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | சி50 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | 18 ஆம் நூற்றாண்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | இத்தாலிய ஆட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
அங்கேரியன் தடுப்பாட்டம் (Hungarian Defense) என்ற சதுரங்கத் திறப்பு கீழ்கண்ட நகர்வுகளுடன் தொடங்கி விளையாடப்படுகிறது.
அங்கேரியத் தடுப்பாட்டம் இத்தாலிய ஆட்டத்தின் சதுரங்க நகர்வுகளின் வரிசையில் விளையாடப்படும் ஒரு நகர்வு வரிசையாகும். 3.Bc4 என்ற வலிய தாக்குதலுக்கு கண்டிப்பாக கருப்பு தேர்ந்தெடுத்து பதில் சொல்லியாக வேண்டிய நிலையை உண்டாக்குகிறது. நவீன கால போட்டிகளில் இத்துவக்கம் எப்போதாவது காணப்படுகிறது.
அங்கேரியின் பெசுட்டு மற்றும் பாரிசுக்கு இடையில் 1842-1845 ஆண்டுகளுக்கிடையில் நடைபெற்ற அஞ்சல்வழி ஆட்டங்களின் அடிப்படையிலிருந்து இத்திறப்பிற்கான பெயர் உருவானது. ஆனால் 18 ஆம் நூற்றாண்டில் கோசியோ என்ற இத்தாலிய சதுரங்க வீர்ரே இத்திறப்பைக் குறித்து ஆய்வு மேற்கொண்டார்[1]. ரெசிவ்சுகி, ஆர்ட்டு. முன்னாள் உலகச் சாம்பியன் பெட்ரோசியன், சிம்சுலோவ் போன்ற கிராண்டு மாசுட்டர்கள் எப்போதாவது இந்தத் திறப்புடன் ஆட்டத்தைத் தொடங்குவதுண்டு. ஆனால் வலிமையான பாதுகாப்பு முன்னேற்பாட்டு அமைப்புகளுடன் விளையாடுவர்.
3...Be7 என்ற நகர்வை விளையாடுவதால் கருப்பு கியுக்கோ பியானோவின் (3...Bc5), இவான்சு பலியாட்டத்தின் (3...Bc5 4.b4), இரு குதிரைகள் தடுப்பாட்டத்தின் (3...Nf6) போன்ற சில சிக்கல்களைத் தவிர்க்க நினைக்கிறார். வெள்ளையின் தாராள நகர்வுக்கு போதிய இடம் கிடைக்கிறது. தடைபட்ட இடத்தினை விடுவிக்க கருப்பு ஆட்டக்காரர் தயாராக வேண்டிய நிலை அமைகிறது.
முக்கியமான வரிசை 4.d4
[தொகு]4.d4 என்ற நகர்வை விளையாடுவதே வெள்ளைக்கு சிறந்த ஆட்டமாக அமையும். மையத்தை ஆக்ரமிக்கும் நோக்கு வெள்ளையின் திட்டமாக இருக்கும். மற்ற நகர்வுகள் கருப்புக்கு பெரிய அச்சுறுத்தல் எதையும் கொடுக்காது.: 4.c3 Nf6 (சிடெயிண்ட்சு),அல்லது 4.0-0 Nf6 5.Nc3 d6 6.d4 Bg4 [1] 4.d4 என நகர்த்தினால் கருப்பு 4...exd4 அல்லது 4...d6.என்று தான் நகர்த்தும்.
4...exd4
[தொகு]ஒருவேளை 4...exd4 என்று கருப்பு விளையாடினால் 5.Nxd4 என்று விளையாடலாம். ஆட்டம் சிகாட்சு ஆட்டத்தின் ஒரு வகைக்கு மாறிவிடும். வெள்ளைக்கு இட அனுகூலம் கிடைக்கும். 5.c3 என்று விளையாடுவது பலவீனமாக நகர்வாகும். 5...dxc3?! என கருப்பு விளையாடும் என்ற நம்பிக்கையில் ஆடும் நகர்வு அதுவாகும். உடனே வெள்ளை 6.Qd5! என நகர்த்தி விரைவான வெற்றியை நெருங்கிவிடலாம் என்பது வெள்ளையின் திட்டம். 1974 ஒலிம்பியாடு போட்டியில் மிட்யோர்டு-சிகார்ப் ஆட்டத்தில் கருப்பு இப்படியான ஒரு ஆட்டத்தில் தோற்க நேர்ந்தது.
6...Nh6 7.Bxh6 0-0 8.Bc1? Nb4 9.Qd1 c2 கருப்பு இழந்த காயைப் பெறுகிறது. எனவே வெள்ளை 8.Bxg7 Kxg7 9.Nxc3 என்ற நகர்வுகளைச் செய்து விளையாடினால் நலம் விளையும்[1]. இருப்பினும் 5...Na5 என்ற நகர்வையும் சிகோரின் பரிந்துரைக்கிறார் [2]. வெள்ளை 6.Qxd4 என்று விளையாடலாம் அல்லது சிப்பாயை தியாகம் செய்யலாம். 5...Nf6 6.e5 Ne4 என்றும் கருப்பு விளையாடலாம். (டார்டாகோவர் மாறுபாடு[3]) 7.Bd5 Nc5 8.cxd4 Ne6 (இவான்சு) [4].
4...d6
[தொகு]மாறாக 4...d6 என்ற நகர்வு மூலம் கருப்பு மையப்பகுதியை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும். வெள்ளை நகர்த்துவதற்கு பல்வேறு சாத்தியங்கள் உள்ளன. எல்லா நகர்வுகளுமே ஏதோவொரு வகையில் வெள்ளைக்கு சிறிய அனுகூலத்தையே தருகின்றன. ராணியற்ற ஒரு நடுப்பகுதி ஆட்டத்திற்கு வெள்ளை திட்டமிடலாம். 5.dxe5 dxe5 (5...Nxe5? 6.Nxe5 dxe5 7.Qh5! மற்றும் வெள்ளை ராணியின் e5 மற்றும் f7 மீது இரட்டைத் தாக்குதல், ஒரு சிப்பாய் வெள்ளைக்கு கிடைக்கிறது) 6.Qxd8+ (6.Bd5!? என்றும் விளையாடலாம்) Bxd8 7.Nc3 Nf6. அல்லது வெள்ளை 5.d5 Nb8 என்ற நகர்வுகளையும் அதைத் தொடர்ந்து Bd3 என விளையாடி ராணியின் பக்கத்தில் c4 என்ற நகர்வு மூலம் பழைய இந்தியத் தடுப்பு திறப்புக்கு மாறலாம். இறுதியாக வெள்ளை 5.Nc3 என விளையாடி மையத்தில் பதட்டத்தைப் பேணி அதன் காய்களை திறனுள்ள நிலையில் தொடர்ந்து வைத்திருக்கலாம். ஆர்டிங் மற்றும் போட்டெரில்லின் ஆகியோர் 1977 ஆம் ஆண்டு அவர்களுடைய இத்தாலியன் ஆட்டம் என்ற நூலில் அங்கேரியன் தடுப்பாட்டம் என்ற சதுரங்கத் திறப்பு போட்டியை சமநிலையில் முடிக்க மட்டுமே உதவும் திறப்பு என்ற முடிவைக் கொடுத்துள்ளனர்."[5]