அங்கித் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கித் சர்மா
Ankit Sharma
தனித் தகவல்கள்
பிறந்த நாள்20 சூலை 1992 (1992-07-20) (அகவை 31)
பிறந்த இடம்பினாகத், உத்தரப்பிரதேசம், இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
நிகழ்வு(கள்)நீளந்தாண்டல்
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவைவெளிக்களம்: 8.19 மீ (அல்மாத்தி 2016)
உள்ளறை: 7.66 மீ (தோகா 2016)

அங்கித் சர்மா (Ankit Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நீளந்தாண்டும் வீர்ராவார். 1992 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதி பிறந்தார். கசக்கித்தான் நாட்டின் அல்மாத்தியில் நடைபெற்ற ஆடவர் தடகளப் போட்டியில் சர்மா 8.19 மீ தொலைவை தாண்டியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள பினாகட்டில் ஆசிரியர் அர்நாத் சர்மா மற்றும் மித்லேசு சர்மா ஆகியோரின் இளைய பிள்ளையாக சர்மா பிறந்தார். [1] குடும்பம் முதலில் மத்தியப் பிரதேசம், மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்தது. மேலும் சர்மா பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பினாகட்டுக்கு குடிபெயர்ந்தனர். [2] போபாலில் வணிகத்தில் பட்டம் பெறுவதற்கு முன்பு மொரேனாவில் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். மூத்த சகோதரர் பிரவேசு சர்மாவும் ஒரு தடகள வீரர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கித்_சர்மா&oldid=3373130" இருந்து மீள்விக்கப்பட்டது