உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கதம் (தொல்காப்பியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அங்கதம் என்னும் சொல் தொல்காப்பியத்தில் ஐந்து இடங்களில் குறிப்பிடப்பட்டு அங்கதச் செய்யுள் எப்படி இருக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது.

அங்கதம் என்பது செய்யுள் வகைகளில் ஒன்று. செய்யுள் என்பது நூல்களில் கையாளப்படும் மொழிநடை.

அறிவுரை கூறுதல் "செவியறிவுறூஉ" எனப்படும். இதற்கு மாறாகப் புகழ்ந்தோ, இகழ்ந்தோ பாடுதல் அங்கதம்.

வகை[தொகு]

மொழிநடையைத் தொல்காப்பியர் யாப்பு என்று குறிப்பிடுகிறார்.

பாட்டு உரை நூல் (மொழியிலக்கணம்) வாய்மொழி (நீதி நூல்கள்) பிசி (விடுகதை) அங்கதம் (மொழி கரப்பு) முதுசொல் (முன்னோர் சொன்னவை) [1]

அங்கதப் பொருள் கொண்ட பாடல் வெண்பா யாப்பு. [2]

அங்கதம் 2 வகை புகழ் அங்கதம் அல்லது வசை அங்கதம் \ வெளிப்படையாகப் பழிப்பது பழி கரப்பு அங்கதம் \ மறைமுகச் சொற்களால் பழிப்பது [3] [4] [5] [6] [7] [8] அங்கதப் பாடல் ஆசிரியம், வெண்பா என்னும் இருவகையான பாடல்களாலும் அமையும். எந்தப் பாடலில் அங்கதப்பாடல் அமைகிறதோ அந்தப் பாடலின் அடி எல்லைக்கு உட்பட்டதாக அங்கதப் பாடல் இருக்கும். [9] [10] [11]

மேற்கோள்[தொகு]

 1. பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே \ அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும் \ வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின் \ நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் \ யாப்பின் வழியது என்மனார் புலவர். 75
 2. நெடுவெண்பாட்டே குறுவெண்பாட்டே \ கைக்கிளை பரிபாட்டு அங்கதச் செய்யுளொடு \ ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின. 114
 3. அங்கதம்தானே அரில் தபத் தெரியின் \ செம்பொருள் கரந்தது என இரு வகைத்தே. 120
 4. செம்பொருள் ஆயின வசை எனப்படுமே. 121
 5. மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு ஆகும். 122
 6. செய்யுள்தாமே இரண்டு என மொழிப. 123
 7. புகழொடும் பொருளொடும் புணர்ந்தன்று ஆயின் \ செவியுறைச் செய்யுள் என்மனார் புலவர். 124
 8. வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின் \ அங்கதச் செய்யுள் என்மனார் புலவர். 125
 9. [ஆசிரியப் பாட்டின் அளவிற்கு எல்லை \ ஆயிரம் ஆகும் இழிபு மூன்று அடியே. 150]
 10. [நெடுவெண்பாட்டே முந் நால் அடித்தே \ குறுவெண்பாட்டின் அளவு எழு சீரே. 151]
 11. அங்கதப் பாட்டு அளவு அவற்றொடு ஒக்கும். 15
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கதம்_(தொல்காப்பியம்)&oldid=3804790" இலிருந்து மீள்விக்கப்பட்டது