உள்ளடக்கத்துக்குச் செல்

அக்மோனிட்டால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்மோனிட்டால் கலப்புலோகத்தால் 1940 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இத்தாலிய 1 லிரா நாணயம்

அக்மோனிட்டால் (Acmonital) என்பது துருவேறா எஃகு இரும்பு உலோகக் கலவையாகும். இத்தாலிய நாணய எஃகு என்றும் இக்கலப்புலோகம் அழைக்கப்படுகிறது. இரும்புடன் எடையளவில் 0.14% கார்பன், 17.5-19% குரோமியம், 0.50% மக்னீசியம், 1.15% சிலிக்கான், 0.03% கந்தகம், 0.03% பாசுபரசு ஆகியன சேர்க்கப்பட்டு இக்கலப்புலோகம் தயாரிக்கப்படுகிறது. இத்தாலிய நாணயங்கள் தயாரிப்பில் இக்கலப்புலோகம் பயன்படுகிறது[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. New York Times Archives (1939-06-04). "COINS OF STEEL ALLOY FOR ITALY". New Netherlands Coin Co.. http://select.nytimes.com/gst/abstract.html?res=F10F12F93A58127A93C6A9178DD85F4D8385F9. பார்த்த நாள்: 2010-04-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்மோனிட்டால்&oldid=2659574" இலிருந்து மீள்விக்கப்பட்டது