அக்தர் சல்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அக்தர் சல்மா
Akhter Salma
இயற்பெயர்সালমা আক্তার
பிறப்பிடம்குஸ்தியா மாவட்டம், வங்காளதேசம்[1]
இசைக்கருவி(கள்)தனிப் பாடகர்
இசைத்துறையில்2006–இன்று

அக்தர் சல்மா என அழைக்கப்படும் மௌசுமி அக்தர் சல்மா (Moushumi Akhter Salma[2] என்பவர் வங்காளதேசத்தைச் சேர்ந்த நாட்டுப்புறப் பாடகி ஆவர். 'என்டிவி' தொலைக்காட்சியினால் 2006-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட "குளோஸ்அப் 1" எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.[3] .

இளமைக்காலம்[தொகு]

இவர் கங்காரம்பூர் எனும் ஊரில் பிறந்தவர்.

இசை வாழ்க்கை[தொகு]

இவர் நான்கு வயதில் தனது குருவான பவுல் ஷாபி மன்டல் என்பவரிடம் இசை பயின்றார். பராம்பரிய இசையுடன் நாட்டுப்புற இசையையும் தனது குருவிடம் பயின்றார். இவர் வாழ்க்கையில் பெரிய மாற்றம் அவரின் 12 வயதில் நிகழ்ந்தது. ' என்ரீவி' 2006 இல் நிகழ்த்திய "குளோசப் 1" (சீசன் 2 ) எனும் இசை நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்திருந்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் ஒருலட்சம் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்[4].

இவர் ஏனைய பெங்காலி நாட்டுப்புற பாடல்களுடன் லலோன் கீதி பாடல்களையும் பாடினார். இவர் நடுத்தர பாரம்பரிய மற்றும் நவீன பாடல்களையும் பாடக்கூடியவர். 2011 இல் இருந்து இப்போதுவரை உஸ்ராட் சஞ்சிப் தேசிங் என்பவரிடமும் கல்வி பயில்கின்றார். இவர் தனியே 11 ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இவர் 30 கலப்பு ஆல்பங்களிலும பணியாற்றியுள்ளார். இவரின் முதலாவது தனி ஆல்பம் "பாணியா பொந்து " என்பதாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 2010 இல் சிபிலி சாதிக் என்பவரை திருமணம் செய்தார். இவரின் கணவர் தினச்பூர் -6 எனும் தொகுதியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது சிறந்த தொழிலதிபரும் ஆவார்[2][5]. 2012 இல் இவருக்கு முதலாவது பெண் குழந்தை பிறந்தது. பெயர் சினேகா. 2016 நவம்பர் மாதத்தில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்தும் பெற்றார். பின்னர் இவர் பிரிட்டனில் இருந்த் குடிபெயர்ந்த சனௌல்லா சகர் என்பவரை 31. டிசம்பர். 2018 இல் மறுமணம் புரிந்தார். இதன் மூலம் தனது இரண்டாவது மகளான சபியா நூர் என்பவரை 2019 டிசம்பரில் பெற்றெடுத்தார் [6].

குளோசப் 1 இசைநிகழ்ச்சி[தொகு]

இந்நிகழ்ச்சியில் பிரதானமாக மூன்று போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தனர். இவ் இறுதிப்போட்டியானது பங்களாதேஷ்- சீனா நட்பு மாநாட்டு மத்தியநிலையத்தில் பல கலாச்சார பிரபல்யங்களின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகள் பல அதற்கு முந்தைய வருடம் இறுதிப்போட்டிக்கு தெரிவானோராலும் மற்றும் இவ்வாண்டு போட்டியில் பங்குபற்றியவர்களாலும் நடாத்தபட்டது. இந்நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் ஷல்மா மற்றும் முகின் இருவருக்குமிடையில் யார் வெற்றியாளர் எனும் அறிவிப்பு நடைபெற்றது. இதில் குஷ்தியாவில் இருந்து பங்குபற்றிய ஷல்மா வெற்றியீட்டினார் என அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றியீட்டிய ஷல்மாவிற்கு ரூபாய் 10 லட்சம், ஒர் புது கார் மற்றும் பல பரிசுகள் வழங்கப்பட்டன.இப்போட்டியில் இவர் சுமார் 17,96,931 குறுந்தகவல் வாக்குகளையும் நடுவர்களிடம் இருந்து 40 புள்ளிகளையும் பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷல்மா கூறியதாவது " நான் மிகவும் மகிழ்ச்சியாக இருககிறேன். இந்நிலைக்கு வருவேன் என நினைத்தும் பார்ககவில்லை. முன்னிலைக்கு வராதவர்களை நினைத்து வருத்தபடுகிறேன். இருப்பினும் அனைவரும் பெற்றிருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்". ஷல்மா தனது சாதனைகளை பற்றி கூறும் பொழுது " இது எனது பாடல்திறனின் பிரதானமான முன்னேற்றமாகும். இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நடுவர்கள் எனக்கு எல்லா விதத்திலும் உதவியாக இருந்துள்ளனர். என்று விவரித்திருந்தார் [7].

விருதுகள்[தொகு]

  • வச்சாஸ் - சிறந்த பெண் பாடகி

மேற்கோள்கள்[தொகு]

  1. Khalid-Bin-Habib (5 January 2007). "New voices, unadulterated popularity". The Daily Star. http://archive.thedailystar.net/2007/01/05/d701051402121.htm. பார்த்த நாள்: 22 July 2017. 
  2. 2.0 2.1 Zahid Akbar (15 January 2017). "আজ-স্নেহা-আর-আমি-একই-পেশাক-পরবো"-77305 ""আজ স্নেহা আর আমি একই পোশাক পরবো"" (in bn). The Daily Star. http://www.thedailystar.net/bangla/anandadhara/"আজ-স্নেহা-আর-আমি-একই-পেশাক-পরবো"-77305. பார்த்த நாள்: 22 July 2017. 
  3. "‘মেয়ের মুখের দিকে তাকালেই শিবলিকে মিস করি’". Bhorer Kagoj. 14 January 2017. http://www.bhorerkagoj.net/online/2017/01/14/318995.php. பார்த்த நாள்: 22 July 2017. 
  4. "Singer Salma shows ‘unprecedented love’ to Ahmed Imtiaz Bulbul". Daily Sun. 16 February 2016. http://www.daily-sun.com/post/114448/Singer-Salma-shows-%E2%80%98unprecedented-love%E2%80%99-to-Ahmed-Imtiaz-Bulbul. 
  5. "মেয়ের জন্মদিনে সালমা" (in bn). Prothom Alo. December 29, 2012. http://archive.prothom-alo.com/detail/news/317169. பார்த்த நாள்: July 22, 2017. 
  6. "ফের মা হলেন সালমা" (2019-09-07).
  7. Khalid-Bin-Habib (5 January 2007). "New voices, unadulterated popularity". The Daily Star. http://archive.thedailystar.net/2007/01/05/d701051402121.htm. பார்த்த நாள்: 22 July 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்தர்_சல்மா&oldid=2951950" இருந்து மீள்விக்கப்பட்டது