அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம்
Agharkar Research Institute
வகைஆராய்ச்சி நிறுவனம்
உருவாக்கம்1946[1]
பணிப்பாளர்முனைவர் கிசோர் எம் பக்னிகர்[2]
அமைவிடம், ,
இந்தியா
வளாகம்நகர்ப்புறம்
நிறுவன இயக்குநர்சங்கர் புருசோத்தம் அகர்கர்
இணையதளம்www.aripune.org

அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம் (Agharkar Research Institute) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி, மானிய உதவி ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். 1946 ஆம் ஆண்டில் மகாராட்டிர அறிவியல் சாகுபடி சங்கம் என்ற பெயரில் ஓர் ஆராய்ச்சி நிறுவனமாக இது நிறுவப்பட்டது. இதன் நிறுவனரும் இயக்குனருமான மறைந்த பேராசிரியர் சங்கர் புருசோத்தம் அகர்கரின் நினைவாக 1992 ஆம் ஆண்டில் அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது. இங்கு விலங்கு அறிவியல், நுண்ணுயிர் அறிவியல் மற்றும் தாவர அறிவியல் ஆகியவற்றில் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ARI History".
  2. "administration".
  3. "Maharashtra Association for the Cultivation of Science Research Institute was renamed". dst.gov.in. Department of Science and Technology. Archived from the original on 29 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 2 மே 2014.

புற இணைப்புகள்[தொகு]