அகமது அலி கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமது அலி கான்
தொகுதிகர்னூல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அகமது அலி கான்

04.05.1977
கர்னூல், கர்னூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்கர்னூல்
கல்விபி.காம் கணிப்பொறியியல், உசுமானியா கல்லூரி, கர்னூல்.

அகமது அலி கான் (Ahmed Ali Khan) (பிறப்பு 4 மே 1977) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி ஆவார். காங்கிரசு கட்சியின் சார்பாக ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆவார். பொதுச் சேவைக்காக இவர் பிரபலமானவர்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அகமது அலி கான் கர்னூலில் வாழும் நல்ல தொழிலதிபர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார். ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டம் கர்னூலில் 1977 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதியன்று மெகமூத் அலி கானுக்குப் பிறந்தார். கர்னூல் உசுமானியா கல்லூரியில் 1998-99 ஆண்டு காலத்தில் வணிகவியலில் பி.காம் பட்டம் பெற்றார்.[1]

வணிக வாழ்க்கை[தொகு]

அகமது அலி கான் 1998 ஆம் ஆண்டு முதல் கர்னூல் எம்.எசு.ஏ. மோட்டார் நிறுவனத்தின் கொள்முதல் வியாபாரியாக இருந்து வந்தார். தற்போது எம்எசுஏ மோட்டார் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். எம்எசுஏ வணிகர்[2] மற்றும் கமல் தொழில் நிறுவனம் எனப்படும் பிற வணிகங்களையும் இவர் வைத்திருக்கிறார்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

அகமது அலி கான் அகில இந்திய காங்கிரசு கமிட்டி உறுப்பினர். கர்னூல் நகர சட்டமன்ற பொறுப்பாளராகவும், சிறுபான்மை துறை ஆந்திர பிரதேச காங்கிரசு கமிட்டி தலைவராகவும் பொறுப்பில் உள்ளார்.

அகமது அலி கான் கர்னூல் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக 2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "My Neta Info". பார்க்கப்பட்ட நாள் 4 May 2014.
  2. "Exporters India".
  3. "Empowring India". Archived from the original on 8 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 16 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_அலி_கான்&oldid=3926940" இலிருந்து மீள்விக்கப்பட்டது