அகமதாபாத்து நகர அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமதாபாத்து நகர அரங்கம்
Ahmedabad Town Hall
2014 ஆம் ஆண்டில் அகமதாபாத்து நகர அரங்கம்
Map
மாற்றுப் பெயர்கள்சேத் மங்கல்தாசு கிர்தர்தாசு நினைவு மண்டபம்
பொதுவான தகவல்கள்
வகைகலையரங்கம்
கட்டிடக்கலை பாணிகுசராத்திய இந்து கோவில்களின் எழில்படுக் கலை
முகவரிஎல்லிசுபாலம் அருகில்
நகரம்அகமதாபாது
நாடுஇந்தியா
கட்டுமான ஆரம்பம்1936[1]
மதிப்பிடப்பட்ட நிறைவு1938
புதுப்பித்தல்1960s, 1997-98
உரிமையாளர்அம்தாவத் நகராட்சி ஆணையம்
தொழில்நுட்ப விபரங்கள்
மூலப்பொருள்செங்கல் சுவர், கற்காரை குவிமாடம்
தள எண்ணிக்கை2
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)கிளாடு பேட்லி
புதுப்பித்தல் குழு
கட்டிடக்கலைஞர்(கள்)கமல் மங்கள்தாசு
அமைப்புப் பொறியாளர்தேவேந்திர சா

அகமதாபாத் நகர அரங்கம் (Ahmedabad Town Hall) இந்தியாவிலுள்ள குசராத்து மாநிலத்தின் அகமதாபாத்து நகரில் அமைந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக சேத் மங்கல்தாசு கிர்தர்தாசு நினைவு மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. மங்கல்தாசு கிர்தர்தாசு என்ற நெசவு தொழிலதிபரின் நினைவாக இவ்வரங்கத்திற்கு அவர் பெயரிடப்பட்டது.[2]

வரலாறு[தொகு]

20 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நெசவு தொழிலதிபரான மங்கள்தாசு கிர்தர்தாசின் நினைவாக 1930 ஆம் ஆண்டுகளில் குடிமக்கள் வழங்கிய நிதி உதவியால் அரங்கம் கட்டப்பட்டது. அகமதாபாத் மாநகராட்சிக்கு இந்நகர அரங்கம் சொந்தமானதாகும்.[3]

1960 ஆம் ஆண்டில் பி.வி. தோசியினால் அரங்கம் புதுப்பிக்கப்பட்டது. சிறந்த ஒலியியல் விளைவுகளை கருத்திற் கொண்டு இவர் மேற்கூரையை மாற்றியமைத்தார்.[3]

மங்கல்தாசு கிர்தர்தாசின் பெயரனான கட்டிடக் கலைஞர் கமல் மங்கள்தாசு 1997-98 ஆம் ஆண்டுகளில் மீண்டும் ஒரு விரிவான சீரமைப்பை மேற்கொண்டார். மேற்கூரையை அகற்றி அசல் கட்டிடத்தைச் சுற்றிலும் ஒரு மேடையைச் இவர் உருவாக்கினார்.[3]

கட்டடக்கலை[தொகு]

1939 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கட்டிடக் கலைஞர் கிளாட் பேட்லி என்பவரால் அகமதாபாத் நகர அரங்கம் வடிவமைக்கப்பட்டது. இவர் அதற்கு அடுத்ததாக எம்.ஜே. நூலகத்தையும் வடிவமைத்தார்.[4][5][6]

1920-1930 ஆம் ஆண்டுகள் காலத்திய கலை வட்டிவத்திற்கு இவ்வரங்கம் ஓர் எடுத்துக்காட்டாகும்.[3] 45 பாகையில் இரண்டு சுழலும் சதுரங்களைப் பயன்படுத்தி ஒரு நட்சத்திர வடிவத்தை உருவாக்கும் விதத்தில் கட்டிடத்தின் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகக் கிடைக்கும் எண்கோண இடமானது அமரும் இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மையச் சதுரத்தின் முன் மற்றும் பின்புறத்தில் செவ்வகங்கள் சேர்க்கப்பட்டு அவை முறையே முன்மண்டபமாகவும் மேடையாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. நட்சத்திர வடிவ கட்டடம் ஒரு எண்கோண இடத்தில் குவிமாடத்தால் மூடப்பட்டுள்ளது. முழு திட்டமும் குசராத்திய இந்து கோவில்களின் மண்டபங்களில் இருந்து உத்வேகம் பெற்றதாக உள்ளது. வெளிப்புறத்தில் செங்கற்கள் படிந்த பின் மூலைகளும் இந்து கோவில்களின் சிக்கலான வெளிப்புறமும் வெளிப்படுகின்றன.[5][7]

தடிமனான சுவர்கள் செங்கற்களால் கட்டப்பட்டு அதன் மேல் எண்கோண கருங்கற்காரை குவிமாடம் கட்டப்பட்டுள்ளது. கட்டமைப்பில் உள்ள அலங்காரமான கம்பிகளும் குசராத்திய கட்டிடக்கலை பாரம்பரியத்தின் செல்வாக்கைக் காட்டுகிறது.[8][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jon T. Lang (2002). A Concise History of Modern Architecture in India. Orient Blackswan. பக். 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788178240176. 
  2. "Colonial Architecture - A Complete Ahmedabad City Guide by Dr. Manek Patel". www.welcometoahmedabad.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.
  3. 3.0 3.1 3.2 3.3 "Sheth Mangaldas Town Hall | Kamal Mangaldas Architect". kamalmangaldas.net. பார்க்கப்பட்ட நாள் 2020-05-23.
  4. Achyut Yagnik (2011). Ahmedabad: From Royal city to Megacity. Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184754735. 
  5. 5.0 5.1 Williamson, Daniel (2016). "Modern Architecture and Capitalist Patronage in Ahmedabad, India 1947-1969". ProQuest Dissertations Publishing. New York University. pp. 288–291. பார்க்கப்பட்ட நாள் 2020-05-22 – via ProQuest.
  6. Pandya, Yatin (2013-01-07). "Ahmedabad: Where masters crafted their dreams". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
  7. 7.0 7.1 Vasavada, Rabindra; Cunha, Dilip da; Tiwari, Meenu (2020). "Modernity – An important phase in History of Architecture of India" (in en). Seminar on Architecture. https://architexturez.net/doc/az-cf-205137. 
  8. India: Modern Architectures in History. Reaktion Books, 2015. 2015. பக். 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781780234687. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமதாபாத்து_நகர_அரங்கம்&oldid=3399342" இலிருந்து மீள்விக்கப்பட்டது