அஃதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஃதை சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோசர் குடித் தலைவன் மற்றும் சிறந்த வள்ளல். அவனைப்பற்றி சங்கப் பாடல்களில் உள்ள செய்திகள் பின்வருமாறு:

  • அஃதை முரசு முழக்கி நல்ல அணிகலன்களைப் பரிசாக வழங்குவான். [1]
  • கோசர் குடிமக்களில் ஒருசாரார் பெண்யானையை வைத்துக்கொண்டு ஆண்யானைகளைப் பிடித்துப் பழக்கிவந்தனர். அவர்கள் கையில் வேலேந்தி யானைகளைப் பழக்கிவந்ததால் 'பல்வேல் கோசர்' எனச் சிறப்பிக்கப்பட்டனர். அஃதை இந்தப் 'புன்தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்' என்று போற்றப்பட்டான். பல்வேல் கோசர் இந்த அஃதைக்குப் பாதுகாவலாய் விளங்கினர். [2]

மேலும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு, நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை, அவை புகு பொருநர் பறை (பரணர் - அகநானூறு 76)
  2. புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன், மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி, காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர், இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின், வளம் கெழு நல் நாடு(கல்லாடனார் - அகநானூறு 113)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஃதை&oldid=3210145" இலிருந்து மீள்விக்கப்பட்டது