ஃபைசு தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஃபைசு தீவு (Fais Island) மைக்குரோனீசியக் கூட்டு நாடுகளின் ஒரு பகுதியாகிய யாப் மாநிலத்தின் வெளிப்புறத் தீவுகளில் ஒன்று. இது உலகின் மிக ஆழமான கடற் பகுதியாகிய சலஞ்சர் ஆழம் என்னும் இடத்திற்கு ஆகக் கிட்டிய தொலைவில் உள்ள நிலப்பகுதியாகும். பிரெஞ்சுக் கடற்படைத் தலைவரான லூயி டிரொமெலின் (Louis Tromelin) என்பவரே இத்தீவைக் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. 1828-29 காலப்பகுதியில் பசிபிக் பெருங்கடல் ஊடாகப் பயணம் செய்தபோது இதை அவர் கண்டுபிடித்தார். எனினும், 16 ஆம் நூற்றாண்டிலேயே பிரான்சிசு டி காசுட்ரோ என்பவர் பிலிப்பைன்சு நாட்டுக்குச் செல்லும்போது கடுங் காற்றினால் இப்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Yap State Census Report, 2000 ( PDF)
  2. "Oceandots". Archived from the original on December 23, 2010. பார்க்கப்பட்ட நாள் 2012-01-31.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  3. Ratzel, Friedrich (1896). "Legend of Papa and Kaka". The History of Mankind. London: MacMillan. Archived from the original on 6 July 2011. accessed 30 May 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபைசு_தீவு&oldid=3889712" இலிருந்து மீள்விக்கப்பட்டது