மைய சிரை அழுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைய சிரை அழுத்தம் (Central venous pressure) என்பது வலது இதயமேலறைக்கு அருகில் மேற்பெருஞ் சிரையில் (superior vena cave) உள்ள குருதியின் அழுத்தம் ஆகும். இது தோராயமாக வலது மேலறை இரத்த அழுத்தத்தை உணர்த்துகிறது. மைய சிரை அழுத்தம் என்பது இதயத்திற்கு திரும்பும் குருதியின் அளவையும் இதயத்தின் இரத்தத்தை உந்தியழுத்தும் திறனையும் குறிக்கிறது. பெரும்பாலான தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இதை அளக்கும் தனி கண்காணிப்பான்கள் இருக்கும்.

இயல்பான அளவு - 2 முதல் 6 மி.மீ பாதரச தம்பம் (mmHg)

இதயச் செயலிழப்பு, நுரையீரல் உறை நீர்கோர்ப்பு ‌ போன்ற நிலைகளில் மைய சிரை அழுத்தம் அதிகமாகவும் உடலில் பயனுறு குருதி ஓட்டம் குறைவாக இருக்கும் நிலைகளில் இது குறைவாக இருக்கும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மைய_சிரை_அழுத்தம்&oldid=2795048" இலிருந்து மீள்விக்கப்பட்டது