உள்ளடக்கத்துக்குச் செல்

எதிர்ப் பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எதிர்ப்பொருள் (anti-matter) என்பது இப்பேரண்டத்தில் (பிரபஞ்சத்தில்) எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாகும். இது பொருளுக்கு இணையானதும் நேர்எதிரானதும் ஆகும். பொருளும் எதிர்ப்பொருளும் சேர்ந்தால் அவை ஒன்றை ஒன்று அழித்துப் (annihilation) பேராற்றல் வெளிப்படும்.

உதாரணம்

[தொகு]

ஒவ்வொரு அடிப்படைத் துகளுக்கும் ஒரு எதிர்த்துகள் உண்டு. எ.கா: எலக்ட்ரானின் எதிர்த்துகள் பாசிட்ரான் ஆகும். இவை இரண்டும் ஒரே நிறை உடையவை. ஆனால் எலக்ட்ரான் (எதிர்மின்னி) எதிர்மறை மின்சுமையும் பாசிட்ரான் நேர்மறை மின்சுமையும் பெற்றுள்ளன.

கற்பனைக்கதைகளில்

[தொகு]

பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் கற்பனைக்கதைகளில் எதிர்ப்பொருளைப் பயன்படுத்தி உள்ளனர். டான் பிரௌன் எழுதிய ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ் நாவலில் எதிர்ப்பொருள் உலகை அழிக்கவல்ல ஆயுதமாய் சித்தரிக்கப்படுகிறது.

பெருவெடிப்பு

[தொகு]

பிரபஞ்சத் துவக்கம் சமஅளவு பொருளும் சமஅளவு எதிர்ப்பொருளும் சேர்ந்து ஒன்றையொன்று அழித்துக் கொண்டதால் உண்டான பெருவெடிப்பினாலேயே என்று நம்பப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்ப்_பொருள்&oldid=3818057" இலிருந்து மீள்விக்கப்பட்டது