நந்தன் நிலெக்கணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தன் மோகன் நிலெக்கணி
பிறப்புசூன் 2, 1955 (1955-06-02) (அகவை 68)
பெங்களூரு,கர்நாடகம், இந்தியா
பணி(முன்னாள்) தலைவர், இந்தியத் தனி அடையாள ஆணையம்(UIDAI)
ஊதியம்$203,545(இன்போசிஸில் 2007 நிகர இழப்பீடு)[1]
சொத்து மதிப்பு $1.3 பில்லியன் அமெரிக்க டாலர்
வாழ்க்கைத்
துணை
ரோகிணி

நந்தன் மோகன் நிலெக்கணி (Nandan Nilekani கொங்கணி/கன்னட வரிவடிவில்: ನಂದನ ನಿಲೇಕಣಿ)(பிறப்பு: ஜூன் 2,1955) இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உடன்தலைவராகப் பணிபுரிந்த மென்பொருள் தொழில்முனைவர் ஆவார். இந்திய அரசால் இந்திய வேறிலித்தனி அடையாளவெண் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து ஜூலை 9, 2009 ஆம் ஆண்டு இன்போசிஸ் பதவியைத் துறந்தார்.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெங்களூர் (தெற்கு) பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடவிருந்ததை அடுத்து இந்திய வேறிலித்தனி அடையாளவெண் ஆணையத்தின் பதவியிலிருந்து விலகும் பதவி விலகல் கடிதத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தார். மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

இவரது மற்றும் இவரது மனைவி பெயரில் இருக்கும் சொத்து மதிப்பு ரூபாய் 7,700 கோடி[2]

இந்திய அரசு, அவரது பங்காற்றலை பாராட்டி நாட்டின் உயரிய விருதாகிய பத்ம பூசன் விருதை 2006 ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்துள்ளது.

இளமை[தொகு]

நந்தன் நிலெக்கணி, 1955ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 2ஆம் நாள் பெங்களூருவில் துர்கா மற்றும் மோகன் ராவ் நிலெக்கணி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். பெங்களூரூவின் பிஷப் காட்டன் பாய்ஸ் பள்ளியில் படித்து 1978இல் மின் பொறியியல் பட்டத்தை இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பையில் பெற்றார்.[3]

படித்து முடித்தவுடன் மும்பையிலிருந்த பத்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு தொழிலதிபர் நாராயண மூர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. 1981இல் மூர்த்தி பத்னியிலிருந்து வெளியேறியபோது இவரும் அவருடன் இணைந்து வெளியேறினார். மாதுங்காவில் இருந்த என். எஸ். இராகவனின் வீட்டிலிருந்து துவங்கப்பட்டதுதான் இன்போசிஸ்.

மார்ச்,2002 லிருந்து ஏப்ரல்,2007 வரை, நாராயணமூர்த்தி விலகியபிறகு, இன்போசிசின் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றினார். 2007 இலிருந்து ஜூன், 2009இல் அரசுப்பணியில் நியமிக்கப்படும்வரை இந்நிறுவனத்தின் உடன்தலைவராக இருந்தார்.

அரசியல்[தொகு]

காங்கிரசில் இணைந்த இவர் தென் பெங்களூரு மக்களவைத்தொகுதியில் இருந்து அக்கட்சி சார்பாக 2014ஆம் ஆண்டு போட்டியிட்டார்.[4] தோல்வியுற்றார்.

இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nandan M. Nilekani Profile". போர்பசு வலைத்தளம். பார்க்கப்பட்ட நாள் 2009-06-28.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://businesstoday.intoday.in/story/nandan-nilekani-rohini-declare-assets-worth-rs-7700-crore/1/204474.html
  3. Infosys Technologies Limited (2007-06-22). "About Infosys | Management Profiles | Nandan M. Nilekani". Infosys. Archived from the original on 2009-03-15. பார்க்கப்பட்ட நாள் 2009-06-28.
  4. "Page Not Found". ECIResults.nic.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2018. {{cite web}}: Cite uses generic title (help)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தன்_நிலெக்கணி&oldid=3946291" இலிருந்து மீள்விக்கப்பட்டது