பள்ளிப் பாதுகாப்பு
பள்ளிப் பாதுகாப்பு (School security) என்பது கல்விச் சூழலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்த்து எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது.[1] இது வன்முறை மற்றும் கொடுமைப்படுத்துதலில் இருந்து மாணவர்களின் தங்குமிடம் ஆகியவற்றைப் பாதுகாப்பது மற்றும் போதைப்பொருள், துப்பாக்கிகள் மற்றும் கும்பல் செயல்பாடு போன்ற தீங்கு விளைவிக்கும் கூறுகளை வெளிப்படுத்துவது ஆகிய செயல்களை உள்ளடக்கியது என வரையறுக்கப்படுகிறது.[2] மற்ற பொது இடங்களுடன், பள்ளிகளை ஒப்பிடும்போது வெளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் தாக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்[தொகு]
துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புகள்[தொகு]
அமெரிக்காவில், 1990 முதல் சனவரி 2018 வரை குறைந்தது 240 பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 450% அதிகரித்துள்ளது [3] பள்ளிக் குண்டுவெடிப்புகள் 2016 இல் 22 முறை நடந்துள்ளது. ஆனால் அமெரிக்க வெடிகுண்டு தரவு மையத்தின் படி, மற்ற கட்டிடங்களை விட கல்வி தொடர்பான கட்டிடங்கள் இரண்டு மடங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.[4] 74% கல்வி தொடர்பான அச்சுறுத்தல்கள் நடுநிலைப் பள்ளிகள், இளையோர் உயர்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஏற்படுகின்றன. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, 2013-2014 கல்வியாண்டில், 93% பொதுப் பள்ளிகள், பள்ளிக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் வகையில் கதவுகள் மற்றும் வாயில்களை பூட்டுதல் அல்லது கண்காணித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.[5] அரசுப் பள்ளிகளின் நுழைவாயில்களில் மாணவர்கள் ஆயுதங்களை பள்ளிகளுக்குள் கொண்டு வருவதைத் தடுக்க மெட்டல் உலோக உணர்வி நிறுவப்பட்டுள்ளன.[6]
பாதுகாப்பு ஏற்பாடுகள்[தொகு]
பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு பள்ளி மாவட்டத்தின் முதன்மைப் பொறுப்பாகும் என்று தேசியப் பள்ளி வாரிய சங்கம் கூறுகிறது.[7]
பள்ளி வள அலுவலர்கள்[தொகு]
அமெரிக்கப் பள்ளிகளில் மற்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கிடையே கும்பல் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், பள்ளி வளாகங்களில் காவலர்களின் ஆய்வு அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் , தேசிய கல்விப் புள்ளியியல் மையம், அமெரிக்காவில் உள்ள 43% பள்ளிகள் வாரத்திற்கு ஒரு முறை முதல் முழு நேர வேலை நேரம் வரை பள்ளி வள அலுவலர்களை தங்கள் வளாகங்களில் வைத்திருப்பதாக அறிவித்தது.[8]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ . 2016-11-11.
- ↑ "Safety | Safe Supportive Learning". safesupportivelearning.ed.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
- ↑ Duplechain, Rosalind; Morris, Robert (Winter 2014). "School Violence: Reported School Shootings and Making Schools Safer". Education 135 (2): 145–150. https://www.ingentaconnect.com/content/prin/ed/2014/00000135/00000002/art00001.
- ↑ "United States Bomb Data Center Explosive Incident Report". ATF.gov. 2016. https://www.atf.gov/explosives/docs/report/2016-explosives-incident-report/download.
- ↑ "The NCES Fast Facts Tool provides quick answers to many education questions (National Center for Education Statistics)". nces.ed.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
- ↑ "Government Gives Go-Ahead to Metal Detectors in Schools". Education. No. 243. 20 October 2006. pp. 3–5.
- ↑ "School Safety, Security, and Emergency Preparedness | National School Boards Association". www.nsba.org. பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
- ↑ Gray, Lucinda; Lewis, Laurie (May 2015). "Public School Safety and Discipline 2013-14" (PDF).