கனடிய உள்நாட்டு செவிலியர்கள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனடிய உள்நாட்டு செவிலியர்கள் சங்கம்
Canadian Indigenous Nurses Association
சுருக்கம்க.உ.செ.ச.
வகைஅறிவியல்,கல்வி
சட்ட நிலைசெயல்படுகிறது
நோக்கம்கனடியப் பழங்குடி மக்கள் தொழில்முறை செவிலிய நிறுவனம்,
தலைமையகம்ஒட்டாவா, ஒன்றாரியோ, கனடா
சேவை பகுதி
கனடா
ஆட்சி மொழி
ஆங்கிலம், பிரெஞ்சு
சார்புகள்கனடிய செவிலியர்கள் சங்கம்.
வலைத்தளம்www.indigenousnurses.ca

கனடிய உள்நாட்டு செவிலியர்கள் சங்கம் (Canadian Indigenous Nurses Association) என்பது கனடா நாட்டில் செயல்படும் ஓர் அரசு சாரா, இலாப நோக்கற்ற அமைப்பாகும். கனடிய செவிலியர் சங்கத்துடன் இச்சங்கம் குழுவாக இணைந்துள்ளது. கனடிய உள்நாட்டு செவிலியர்கள் சங்கம் கனடாவில் உள்ள பழங்குடியின மக்களுக்கான ஒரே தொழில்முறை செவிலிய அமைப்பாகும். முன்னதாக இது கனடாவின் பழங்குடி செவிலியர் சங்கம் என்ற பெயரால் அறியப்பட்டது. ஆன் தாமசு கலாகன்,என்ற பழங்குடி கனடிய செவிலியர் பழங்குடி செவிலியர் சங்கத்தின் உருவாக்கத்தில் ஈடுபட்டார்.[1] மேலும் சங்கம் இவருக்கு 2014 ஆம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mary Jane Logan McCallum; Adele Perry (2018). Structures of Indifference: An Indigenous Life and Death in a Canadian City. University of Manitoba Press. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88755-571-8.
  2. Degrees, Spring/Summer 2015, p. 9

புற இணைப்புகள்[தொகு]