உள்ளடக்கத்துக்குச் செல்

பீர் அலி கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீர் அலி கான்
Peer Ali Khan
பிறப்பு1812[1]
முகம்மதுபூர், ஆசம்கர் மாவட்டம், உத்தரப் பிரதேசம் (அப்போது பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்)
இறப்புசூலை 7, 1857
இறப்பிற்கான
காரணம்
மரணதண்டனை
தேசியம்இந்தியர்
பணிபுத்தகக் கட்டுநர்
அறியப்படுவதுஇந்திய விடுதலை இயக்கம், சிப்பாய்க் கிளர்ச்சி, 1857

பீர் அலி கான் (Peer Ali Khan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர் ஆவார். 1812 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இந்திய சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றார்.[2] 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது [3][4][5]

கான் தொழிலில் புத்தகம் கட்டுபவராக இருந்தார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு முக்கியமான துண்டு பிரசுரங்கள், மற்றும் குறியிடப்பட்ட செய்திகளை இரகசியமாக விநியோகம் செய்து வந்தார். ஆங்கிலேய அரசுக்கு எதிராக தொடர்ந்து இவர் பிரச்சாரம் செய்தார்.

1857 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 ஆம் தேதியன்று இவர் தனது 33 சீடர்களுடன் கைது செய்யப்பட்டார் [6]

இதே 1857 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 ஆம் தேதியன்று பாட்னாவின் அப்போதைய ஆணையர் வில்லியம் டெய்லரால், 14 கிளர்ச்சியாளர்களுடன் சேர்த்து பொது மக்கள் முன்னிலையில் கான் தூக்கிலிடப்பட்டார். காசிதா கலீஃபா, குலாம் அப்பாசு, நந்து லால் என்ற சிபாகி, சூம்மான், மதுவா, காசில் கான், இரம்சானி, பீர் பக்சு, பீர் அலி, வாகித்து அலி, குலாம் அலி, மகமூத் அக்பர் மற்றும் அசுரர் அலி கான் ஆகியோர் இந்த 14 பேர் பட்டியலில் அடங்குவர்.

நினைவேந்தல்

[தொகு]

பாட்னா விமான நிலையத்தை ஒட்டிய ஒரு சாலைக்கு 2008 ஆம் ஆண்டு நித்திசு குமாரின் அரசாங்கம் இவரது பெயரை சூட்டியது. மேலும், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்திற்கு அருகில் உள்ள மாவட்ட ஆட்சியர் இல்லத்திற்கு எதிரே உள்ள பூங்காவிற்கும் பீகார் அரசால் இவர் பெயரிடப்பட்டுள்ளது.[7]

மேலும் படிக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Editorial Article". employmentnews.gov.in. http://employmentnews.gov.in/newemp/MoreContentNew.aspx?n=Editorial&k=73. பார்த்த நாள்: 22 January 2019. 
  2. "Unsung heroes of freedom struggle". தி இந்து. August 10, 2017. https://www.thehindu.com/children/unsung-heroes/article19464112.ece. 
  3. "The unsung freedom fighters". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. August 15, 2010. https://timesofindia.indiatimes.com/city/patna/The-unsung-freedom-fighters/articleshow/6312588.cms. 
  4. "30 Indian Freedom Fighters Who Disappeared In The Pages Of History". June 2, 2015. https://www.scoopwhoop.com/inothernews/unknown-freedom-fighters/#.atijh4ygt. 
  5. "1857 के विद्रोह में मुसलमानों को संगठित करने वाले पीर अली के वंशज चितरपुर में!". July 6, 2018 இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 23, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190423182107/https://hindi.siasat.com/news/%E0%A4%AA%E0%A5%80%E0%A4%B0-%E0%A4%85%E0%A4%B2%E0%A5%80-%E0%A4%95%E0%A5%87-%E0%A4%B5%E0%A4%82%E0%A4%B6%E0%A4%9C-%E0%A4%9D%E0%A4%BE%E0%A4%B0%E0%A4%96%E0%A4%82%E0%A4%A1-%E0%A4%95%E0%A5%87-%E0%A4%9A-948068/. 
  6. "70 years of Independence: 5 unsung freedom fighters who took British to task in India". India TV News. August 14, 2017. https://www.indiatvnews.com/news/india-70-years-of-independence-5-unsung-freedom-fighters-who-took-british-to-task-in-india-396329. 
  7. "Martyr Peer Ali remembered". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. July 7, 2017. https://timesofindia.indiatimes.com/city/patna/Martyr-Peer-Ali-remembered/articleshow/6139439.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீர்_அலி_கான்&oldid=4109505" இலிருந்து மீள்விக்கப்பட்டது