எலிசபெத் ஆண்டர்சன் சியரா
Appearance
எலிசபெத் ஆண்டர்சன் சியரா | |
---|---|
மற்ற பெயர்கள் | தாய்ப்பாலுக்கான இறைவி |
அறியப்படுவது | தாய்பால் கொடையாளி |
வாழ்க்கைத் துணை | டேவிட் சியரா |
பிள்ளைகள் | இசபெல்லா, சோபியா |
எலிசபெத் ஆண்டர்சன் சியரா என்பவர் புகழ்பெற்ற தாய்ப்பால் கொடையாளி ஆவார். இவர் அதீத தாய்ப்பாலை கொடையாக தந்தமைக்காக அறியப்படுகிறார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓரிகன் மாநிலத்தில் வசிக்கிறார். இவரை தாய்ப்பால் தெய்வம் என அழைக்கின்றனர். [1]
2014 ஆம் ஆண்டில், அவர் ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோயால் கண்டறியப்பட்டார். இந்த நோய்க்குறியின் காரணமாக அவர் ஒரு நாளைக்கு சுமார் 6.65 லி (225 US fl oz; 1.76 US gal), தாய்ப்பாலை உற்பத்தி செய்தார். இந்த அளவானது சராசரி தாயை விட கிட்டத்தட்ட 8 முதல் 10 மடங்கு அதிகமாகும்.[2] அதிகபடியாக உற்பத்தியாகும் தாய்ப்பாலை வீணாக்காமல் கொடையாக தர முன்வந்தார் எலிசபெத் ஆண்டர்சன் சியரா. 250 குழந்தைகளுக்கும், தோராயமாக 2,300 லி (600 US gal) தாய்ப்பாலையும் ஊட்டினார்.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ Paige, Amy (2019-11-07). "Mom With Hyperlactation Donates 600 Gallons Of Breast Milk In 2 Years, Pumping 5 Hours Per Day". LittleThings.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.
- ↑ "Woman produces too much breast milk, donates excess". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2017-08-01. பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.