ஒன்றிணைதல் (வேதியியல்)
Appearance
வேதியியலில், ஒன்றிணைதல் (coalescence) என்பது ஒத்த உட்கூறுடைய இருமுகநிலை ஆட்களங்கள் ஒன்றிணைவதால் பெரிய முகநிலை ஆட்களம் உருவாகும் ஒரு வேதியியல் நிகழ்வாகும். அதாவது, இந்நிகழ்வில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தம்முள் கலக்க முடிந்த பொருள்களின் பொருண்மைகள் ஒன்றையொன்று ஈர்த்து ஒன்றாகிட பார்க்கின்றன.
பன்னாட்டு தூய, பயன்முறை வேதியியல் ஒன்றிய வரையறை[1]
தொடும் இருபொருள்களின் அல்லது துகள்களின் எல்லை மறைந்து
உருவ மாற்றங்கல் அமைந்த ஒரு பலபடி முகநிலை உருவாகி,
மொத்த மேற்பரப்பு சுருங்குதல்.குறிப்பு 1: வரையறை [2] எனும் மேற்கோளில் இருந்து வேறுபடுகிறது.
குறிப்பு 2: கூட்டுகளின் உருவாக்கத்தால் பால்மத்தின் திரைதல்
ஒன்றிணைவால் ஏற்படுகிறது. இந்த ஒன்றிணைவு விரிவாக நிக்ழ்ந்தால், அது பால்மத்தைப் பிளவுறச் செய்கிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ IUPAC Gold Book. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1351/goldbook.C01119.
- ↑ Alan D. MacNaught, Andrew R. Wilkinson, ed. (1997). Compendium of Chemical Terminology: IUPAC Recommendations (2nd ed.). Oxford: Blackwell Science. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0865426848.
- ↑ Slomkowski, Stanislaw; Alemán, José V.; Gilbert, Robert G.; Hess, Michael; Horie, Kazuyuki; Jones, Richard G.; Kubisa, Przemyslaw; Meisel, Ingrid et al. (2011). "Terminology of polymers and polymerization processes in dispersed systems (IUPAC Recommendations 2011)". Pure and Applied Chemistry 83 (12): 2229–2259. doi:10.1351/PAC-REC-10-06-03. http://pac.iupac.org/publications/pac/pdf/2011/pdf/8312x2229.html.