காத்திரைன் ஆக்டாவியா சுட்டீவன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காத்திரைன் ஆக்டாவியா சுட்டீவன்சு (Catherine Octavia Stevens) (1865-1959) ஒரு பயில்நிலை வானியலாளர் ஆவார். இவர் 1905 முதல் 1911 வரை பிரித்தானிய வனியல் கழகத்தின் விண்கல் பிரிவுக்கு இயக்குநராக விளங்கினார்.[1]

இவர் 1891 மே 27 ஆம் நாளன்று பிரித்தானிய வானியல் கழகத்தில் சேர்ந்தார்.[2] இவரது தொடக்க ஆர்வம் சூரியனில் கவிந்திருந்தது. இவர் 3 அங்குல ஒளிவிலகல் அடியால் சூரிக்கரும்புள்ளிகளை வரைந்தார்.[1] இவர் 1910 முதல் 1956 வரை ஓக்சுபோர்டு நகரின் போர்சுகில்ல் மலை உச்சியில் வான்காணகம் இருந்த வீடொன்றில் வாழ்ந்தார்.[1] இவர் அல்ஜியர்சில் 1900 மே 28 இலும் மஜோர்சாவில் 1905 ஆகத்து 30 இலும் கியூபெக்கில் 1932 ஆகத்து 31 இலும் நிகழ்ந்த முழுச் சூரிய ஒளிமறைப்புகளைக் காணச் சென்றிருந்தார்.[1]

குடும்பம்[தொகு]

இவர் 1865 இல் பெர்க்சயரில் உள்ள பிராடுபீல்டில் ஜனவரி 23 ஆம் நாளன்று இரியாக்டரியில் பிறந்துள்ளார்.[3] [4]இவர் பிராடுபீல்டு இரியாக்டரும் பிராடுபீல்டு கல்லூரி நிறுவனருமான தாமசு சுட்டீவன்சுக்கும் (1809-1888) இலாசெசுட்டர்சயரில் உள்ள காட்டெசுபாக் ரியாக்டரான மாண்புமிகு இராபர்ட் மாரியோத்தின் மகளாகிய மாரியோத் எனப்படும் சுசான்னா சுட்டீவன்சுக்கும் (அண்1824-1866)[5] பிறந்துள்ளார்.[6] காத்திரைன் சுட்டிவன்சு 1959 ஜூன் 16 ஆம் நாளன்று இரதுள்ளார்.[1]

இவரது அக்கா மேரி ஆன் சுட்டீவன்சு ஆவர். மேரி ஆன் சுட்டீவன்சு ஜார்ஜ் கில்பெர்ட் இசுகாட்டின் மகனாகிய ஜான் ஓலிடிரீடு இசுகாட்டை மணந்தார்.[7]

வெளியீடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "1960JBAA...70..103. Page 103". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
  2. Larsen, Kristine, "Shooting Stars: The Women Directors of the Meteor Section of the British Astronomical Association", Antiquarian Astronomer, 2006, Issue 3, pp 76-77
  3. 1911 Census of England and Wales
  4. 1939 England and Wales Register
  5. Deaths, Reading Mercury, 14 July, 1866.
  6. Marriages, Leicestershire Mercury, 25 March, 1843
  7. Reading Mercury, 2 May 1868

வெளி இணைப்புகள்[தொகு]