நீலமலை பனி மலர் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலமலை பனி மலர் என்பது 1979-1980இல் வெளியான ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இது தமிழ்நாட்டின், உதகமண்டலத்திலிருந்து வெளிவந்ததது. ஆசிரியராக அரு. அய்சானுல்லா இருந்தார்.[1]

நீலமலை பனி மலர் கனமான உள்ளடக்கங்களைத் தாங்கி வெளி வந்தது. இலக்கியத்துடன் நவீன ஓவியம், திரைப்படம், சமூகச் சக்கல்கள் போன்றவற்றிலும் கவனம் கொண்டிருந்தது. சார்த் ஆல்பெர் காம்யு பற்றிய ஆய்வுகளை வெளியிட்டது. அபத்த நாடகங்களில் ஆர்வம் காட்டியது. தி. ஜானகிராமன், வெங்கட் சாமிநாதன் ஆகியோரை செவ்வி கண்டு வெளியிட்டிருந்த உரையாடல் குறிப்பிடத்தகுந்தது. தமிழவன், நிவேதிதா, கௌதமன், மணிக்கண்ணன், நாகூர் ரூமி முதலியோர் இதில் எழுதியிருக்கிறார்கள்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 255–257. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.