மோனிகா சக்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனிகா சக்மா
Monika Chakma
சுய தகவல்கள்
முழுப் பெயர்மோனிகா சக்மா
பிறந்த நாள்15 செப்டம்பர் 2003 (2003-09-15) (அகவை 20)
பிறந்த இடம்கக்ராச்சாரி மாவட்டம்
உயரம்1.63 m (5 அடி 4 அங்)
ஆடும் நிலை(கள்)நடுக்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
பெண்கள் பாசுந்தரா கிங்சு
எண்6
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2020–பாசுந்தரா கிங்சு25(9)
பன்னாட்டு வாழ்வழி
2014–2016வங்காளதேசம்
14 வயதுக்கு கீழ்
10(5)
2015–2019வங்காளதேசம்
16 வயதுக்கு கீழ்
11
2018–வங்காளதேசம்
19 வயதுக்கு கீழ்
8(1)
2019–வங்காளதேசம்3
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

மோனிகா சக்மா (Monika Chakma) வங்காள தேசத்தைச் (பிறப்பு 15 செப்டம்பர் 2003) சேர்ந்த ஒரு காற்பந்து விளையாட்டு வீராங்கனையாவார். 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். வங்காளதேசப் பெண்கள் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு கால்பந்து அணியில் நடுக்கள வீரராக விளையாடுகிறார். இவரை மந்திர சக்மா என்ற மற்றொரு பெயராலும் அடையாளப்படுத்துகின்றனர்.[1] [2] வங்காளதேச தேசிய கால்பந்து அணியில் உறுப்பினராகவும் வங்காளதேச காவல்துறையில் உறுப்பினராகவும் மோனிகா உள்ளார். மங்கோலிய அணிக்கு எதிரான போட்டியில் அடித்த கோல் இவருக்கு மந்திர சக்மா என்ற பெயரை பெற்றுக் கொடுத்தது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

வங்காளதேச நாட்டின் சிட்டகாங் கோட்டத்தின் கக்ராச்சாரி மாவட்டத்தில் உள்ள பிரம்மச்சாரியில் மோனிகா செப்டம்பர் 15, 2003 அன்று பிறந்தார், [3] கக்ராச்சாரி மாவட்டம். பிந்து குமார் சக்மா மற்றும் ராபி மாலா சக்மா தம்பதியரின் ஐந்து மகள்களில் இவர் இளையவர். மோனிகாவின் மூத்த சகோதரி அனிகா சக்மா என்பவராவார்.

தொழில்[தொகு]

மோனிகா 2010 ஆம் ஆண்டில் லட்சுமிச்சாரியில் உள்ள மார்கிங்கி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பங்கமாதா சேக் ஃபாசிலதுன்னேசா முசிப் கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடி கால் பந்து விளையாட்டுக்கு அறிமுகமானார். தேசிய அளவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பங்கமாதா தங்கக் கோப்பை காற்பந்து போட்டியில் தனது முதல் போட்டியை மோனிகா விளையாடினார். அங்கு இவர் தனது ஆரம்பப் பள்ளியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2012 ஆம் ஆண்டு சிட்டகாங்கில் இருக்கும் ரங்கமதி மகரி அரசு தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். 2013 ஆம் ஆண்டு பள்ளிக்கான பங்கமாதா கால்பந்து போட்டியில் விளையாடிய பிறகு இவர் தேசிய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

மோனிகா வங்காளதேச காற்பந்து அணியின் ஒரு முக்கிய வீராங்கனையாக உள்ளார். சீன தைபே, ஈரான், சிங்கப்பூர், கிர்கிசுதான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சு போன்ற அணிகளை எதிர்த்து வங்காளதேச அணி இறுதிப் போட்டிக்கு சென்றதற்கு இவருடைய பங்கும் முக்கியமானதாகும்.

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

தேசிய அளவில், 14 வயதுக்குட்பட்டோர் அணியில் அழைக்கப்பட்ட முதல் ஆட்டத்தில் மோனிகா தோன்றினார். 2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஆசிய காற்பந்து கூட்டமைப்புப் போட்டியில் மூன்றாவது இடத்திற்கான ஃபேர் ப்ளே கோப்பையை இவர் விளையாடிய அணி வென்றது. அங்கு இவர் மூன்று கோல்களை அடித்தார். ரங்கமதி காக்ரா உயர்நிலைப் பள்ளியில் படித்த பிறகு மோனிகா காக்ரா கல்லூரியின் மனிதநேயத் துறையில் மேல் நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றார். [4] தாய்லாந்தில் நடந்த 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய வெற்றியாளர் காற்பந்து போட்டியிலும் 19 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தங்கக் கோப்பை காற்பந்து போட்டியிலும் அரையிறுதியில் மங்கோலியாவுக்கு எதிராக வங்காளதேசத்துக்காகவும் மோனிகா விளையாடினார். ரசிகர்களுக்கு பிடித்த அணி என்ற பட்டியலில் பன்னாட்டு காற்பந்து கழகங்களின் கூட்டமைப்பு வங்காள தேசத்தைச் சேர்த்துள்ளது. ஏனெனில் மங்கோலிய அணிக்கு எதிரான காற்பந்து போட்டியில் மோனிகா அடித்த கோல் அனைவராலும் புகழப்பட்டது [5]

பல்தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினியில் தனது கல்வியைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் மோனிகா காவல் துறையில் சேர்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fans' Favourites". FIFA.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
  2. "Monika Chakma - Soccer player profile & career statistics". Global Sports Archive. பார்க்கப்பட்ட நாள் 25 May 2019.
  3. (in bn)Kaler Kantho. https://www.kalerkantho.com/print-edition/2nd-rajdhani/2018/01/17/590339. 
  4. (in bn)Daily Janakantha. http://web.dailyjanakantha.com/details/article/335012/মনিকার-জার্সি-বদল-জাতীয়-ফুটবলার-থেকে-পুলিশ/. 
  5. (in bn). https://ekushey-tv.com/ম্যাজিক্যাল-চাকমা-কিশোরী-মনিকা/69761. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிகா_சக்மா&oldid=3580130" இலிருந்து மீள்விக்கப்பட்டது