உள்ளடக்கத்துக்குச் செல்

கோட்லா விஜய் பாஸ்கர் ரெட்டி உள் விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்லா விஜய் பாஸ்கர் ரெட்டி உள் விளையாட்டரங்கம்
Kotla Vijay Bhaskar Reddy Indoor Stadium
முழு பெயர் கோட்லா விஜய் பாஸ்கர் ரெட்டி உள் விளையாட்டரங்கம்
இடம் ஐதராபாத், தெலங்காணா, இந்தியா
எழும்புச்செயல் முடிவு 2003
திறவு 2003
உரிமையாளர் தெலுங்காணா மாநில விளையாட்டு ஆணையம்
ஆளுனர் தெலுங்காணா மாநில விளையாட்டு ஆணையம்
குத்தகை அணி(கள்)
அமரக்கூடிய பேர் 2000

கோட்லா விஜய் பாஸ்கர் ரெட்டி உள் விளையாட்டரங்கம் (Kotla Vijay Bhaskar Reddy Indoor Stadium) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவில் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு உட்புற விளையாட்டு அரங்கமாகும். இதனை 2003ல் முதல்வராக இருந்த நா. சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். இந்த உள் விளையாட்டு அரங்கில் சுமார் 2,000 பேர் அமரலாம்.[1] இது 2003 ல் ஆப்ரோ-ஆசிய விளையாட்டுக்கான சில நிகழ்வுகளை நடத்தியது.[2]

இந்த அரங்கினை, விளையாட்டு விவகாரங்களைக் கவனிக்கும் மாநில அரசுத் துறையான தெலுங்காணா மாநில விளையாட்டு ஆணையம் (எஸ்ஏடிஎஸ்) பராமரிக்கிறது.[3]

வரலாறு

[தொகு]

நவம்பர் 2007இல், இந்த மைதானத்தில் ஐதராபாத்தின் மிகப்பெரிய சற்றுக்கு விளையாட்டுச் சுற்றுப்பாதை திறக்கப்பட்டது. இது 100 மீட்டர் சுற்றளவுடைய தடகளப்பாதையினைக் கொண்டது. ஆந்திராவின் முதல் தேசிய சறுக்கு விளையாட்டு (வேகம்) வாகையர் மற்றும் சர்வதேச பயிற்சியாளரான அப்பாஸ் இக்பால் லாசானியா மற்றும் சர்வதேச பயிற்சியாளரால் பயிற்சியளிக்கப்பட்ட சறுக்கு விளையாட்டு பயிற்சிக்காக வட்டப் பாதை உருவாக்கப்பட்டது. இதில் பயிற்சி பெறும் மாணவர்கள் பன்னாட்டுச் சறுக்கு போட்டிகளில், ரோலர் மற்றும் பனிச் சறுக்கு இரண்டிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

லாசானியாவின் மாணவர்களின் பெற்றோர்களான சவிதா ரெட்டியால் இந்த வளையம் சாத்தியமானது. இவரது மகள் ஷ்ரத்தா ரெட்டி 2010இல் ஆசிய சறுக்குப்போட்டியில் சாம்பியன்ஷிப் பதக்கம் வென்றார்.

குழந்தைகள் மைதானத்தில் பூப்பந்து மற்றும் சறுக்குவிளையாட்டு கற்க வரலாம். லாசானியா நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்தது, அவர்களில் பலர் ஒருங்கிணைந்த ஆந்திராவையும் இறுதியில் தெலங்காணாவையும் தேசிய சாம்பியன்ஷிப்பில் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-06-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-29.
  2. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/andhra-pradesh-to-host-afro-asian-games/articleshow/36005493.cms
  3. http://hyderabadd.com/listing/kotla-vijay-bhaskar-reddy-indoor-stadium/

வெளி இணைப்புகள்

[தொகு]