பயனர்:Tkasi123/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


உறுதிக்கோட்டை நகரத்தார் வரலாறு[தொகு]

இந்த சம்பவம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

நகரத்தார் சம்பந்தமான பிரச்சினைகளை நகரக் கூட்டம் கூட்டி விவாதித்து முடிவு எடுப்பது, பழங்காலம் தொட்டு உள்ள மரபாகும்.

கி.பி.1823- ல் (சித்திரபானு வருடம், ஆனி மாதம் 29-ம் தேதி ) கோவிலூரில் நகரக் கூட்டம் நடக்கும் போது நகரத்தாரில் ஒருவர் குதிரையில் வந்து கூட்டம் நடக்கும் இடத்தில் வந்து, குதிரையை நிறுத்தி இறங்கும் போது, குதிரை வந்த வேகத்தில், தூசி நகரத்தாரின் மேல் பட்டு எல்லா நகரத்தார்களும் கோபப்பட்டு கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்களை நிறுத்தி, முதலில் எல்லா நகரத்தார்களையும் அவமதித்தது குற்றம் என்றும் இதற்கு பைசல் செய்த பின்தான் கூட்டம் நடத்தவேண்டும் என்றும் முடிவு எடுத்தார்களாம்.

அதற்கு கட்டுப்படாமல் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாது விலகிக் கொண்டு அவர் மட்டும் வெளியேறியவுடன் அவரைச் சேர்ந்த பங்காளிகள் சிலரும், கொள்வினை, கொடுப்பினை செய்தவர்களில் சிலரும் சேர்ந்து அதாவது மாத்தூர், வயிரவன் கோவில், பிள்ளையார்பட்டி, இளையாற்றங்குடி இந்த நான்கு கோவில்களை சேர்ந்த 104 புள்ளிகள் பல ஊர்களில் குடியேறி உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் என்ற தலைப்பில் ஒரு முறி எழுதிக்கட்டி இருக்கிறார்கள். அதில் 104 புள்ளிகளும் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்.

அந்த முறியில் கொள்வினை, கொடுப்பினை நன்மை, புதுமை, சுகசோபன காரியங்கள் எவ்விதம் செய்து கொள்வதென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரிந்து வந்த 104 புள்ளிகளும் மேற்படி முறிப்படி ஆவரங்குடி, கருங்குளம், பனக்கரை, சருகணி, உறுதிக்கோட்டை, திட்டுக்கோட்டை, ஏரியூர், சூரக்குடி ஆகிய ஊர்களில் குடியேறி நாளடைவில் இந்த ஊர்களைக் காலிசெய்து தற்சமயம் குமாரவேலூர், சீனமங்கலம், சண்முகநாதபட்டினம், S.சொக்கநாதபுரம், கருங்குளம், ஆவரங்குடி, ஏரியூர், சூரக்குடி, புதூர் ஆகிய ஊர்களில் இருந்து வருகிறார்கள்.

இந்த 104 புள்ளிகளின் வாரிசுகள் இன்று சுமார் 1000 புள்ளிகளாக வளர்ந்து இருக்கிறார்கள். மேற்படி 104 புள்ளிகள் கி.பி.1823-ல் பிரிந்ததிலிருந்து இவர்கள் திருமணங்களுக்கு நகரக் கோவில்களிலிருந்து மாலை அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது.

மொத்தம் உள்ள 9 நகரத்தார் கோவில் பிரிவைச் சார்ந்தவர்களில் 4 கோவிலைச் சார்ந்த சில புள்ளிகள் பிரிந்து வந்து உறுதிக்கோட்டை வட்டகையை உருவாக்கினார்கள். இவர்கள் உறுதிக்கோட்டை வட்டகையைத் தவிர வேறு வட்டகையிலோ,வேறு சமுதாயத்திலோ கொள்வினை, கொடுப்பினை (திருமண உறவுகள்) செய்வது கிடையாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tkasi123/மணல்தொட்டி&oldid=2813807" இலிருந்து மீள்விக்கப்பட்டது