கரிசாக்கு ஒண்முகிற்படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காிசாக்கு ஒண்முகிற்படலம்

கரிசாக்கு ஒண்முகிற்படலங்கள் (coal sack nebulae) என்பவை இயற்கை ஒளி பெற்றவை அல்ல. அருகில் உள்ள விண்மீன்களின் ஒளியால் அவை ஒளி பெறுகின்றன. பால்வழியில், விண்மீன்கள் மிகமிகக் குறைவாக உள்ள திட்டுகளும், விண்மீன்களே இல்லாத திட்டுகளும், இருண்ட முகில்படிவங்களாகத் தோற்றமளிக்கின்றன. இவற்றை இருண்ட ஒண்முகிற்படலங்கள் (dark nabulae) எனக் குறிப்பிடுகின்றனர். இவ்வகையைச் சார்ந்த கரிசாக்கு ஒண்முகிற்படலம் இயல்பான கண்ணாலேயே பார்க்கக்கூடியது. பெரிய கருந்திட்டுப் போல், தென்சிலுவை விண்மீன் குழுவுக்கு அருகில் 4 டிகிரி கோண விட்டத்தில் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கரிசாக்கு ஒண்முகிற்படலங்கள்". அறிவியல் களஞ்சியம் தொகுதி ஏழு. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம். அணுகப்பட்டது 6 சூலை 2017.