தூக்குவாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூக்கு வாளி என்பது பித்தளை, அலுமினியம், எவர்சில்வர் போன்ற பொருட்களினால் செய்யப்பட்ட பாத்திரமாகும். இது திட‌ உணவுகளையும், திரவ உணவு பொருட்களையும் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு எடுத்துச் செல்ல உதவும். பண்டைய தமிழ்ச் சமூகத்தில், குறிப்பாக பால் பொருட்களையும், எண்ணெய் பொருட்களையம் எடுத்துச் செல்வதற்கு இது உபயோகப்படுத்தப்பட்டது.

இன்றைய நவநாகரீக சமூகம் நெகிழிகளில் அடைக்கப்பட்ட பால், எண்ணெய் பொருட்களை பயன்படுத்துவதால் இதன் பயன்பாடு குறைவாக காணப்பட்டாலும், கிராமப்புறங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூக்குவாளி&oldid=2604684" இலிருந்து மீள்விக்கப்பட்டது