1911 இற்கு முந்தைய சீனாவின் இராணுவ வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீனாவைக் கைப்பற்றும்போது மங்கோலியர்கள் வெடிமருந்து ஆயுதமான இடிவிபத்து குண்டுகளை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக் கொண்டனர். ஆயிரக்கணக்கான சீன காலாட்படை மற்றும் கப்பற்படையினரை மங்கோலிய இராணுவத்தில் சேர்த்துக் கொண்டனர். மங்கோலியர்கள் பயன்படுத்த ஆரம்பித்த மற்றொரு ஆயுதம் சரசன்கள் பயன்படுத்திய நிகர் நிலையழுத்த எறிகணை ஏவிகள் (trebuchets) ஆகும். இதை இசுலாமியப் பொறியாளர்கள் உருவாக்கினர். இந்த ஆயுதங்கள் சியாங்க்யாங் முற்றுகையில் முக்கியப் பங்காற்றின. சியாங்க்யாங் வெற்றி மங்கோலியர்களின் சாங் வம்ச வெற்றியின் ஆரம்பமாக அமைந்தது.[1][2][3]

உசாத்துணை[தொகு]